August 12, 2010

பேனா மன்னன்


பேனா மன்னன், சொன்னால் நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த பெயரோடு அல்லது இந்த அடைமொழியோடு ஒருவர் எண்பதுகளில் வலம் வந்தார். மை ஊற்றி எழுதும் மை பேனாக்களை ரிப்பேர் செய்வது அவரின் தொழிலா அல்லது பொழுதுபோக்கா என சரியாக தெரியவில்லை.
அவரின் உண்மையான் பெயர் எனக்கு மட்டுமல்ல், என் அப்பாவிற்கே தெரியாது. எங்கள் சுற்று வட்டாரத்தில் யாவர்க்கும் தெரிந்த நபர் பேனா மன்னன் என்று அழைக்கப்பட்ட பெரியவர். பெயருக்கு ஏற்றார் போல பேனா ரிப்பேர் செய்வதில் மன்னன் அவர். சாமியார் அல்லது பரதேசி போல தாடி வைத்திருப்பார். கக்கத்தில் ஒரு காக்கி கலர் தபால் பை வைத்திருப்பார். அந்த பையுள் தான் ரிப்பேர் செய்யும் 'தொழில் கருவிகள்' இருக்கும். மை கசிதல், பேனா நிப் சரி செய்தல், நாக்கட்டை ரிப்பேர் என இந்தத் தலைமுறை அறியாத பிரச்சினைகள் எங்கள் காலத்தில் இருந்தன.

சனி, க்ஹ்யிறு விடுமுறைகளில், பேனாவை கிளீன் செய்வது பொழுதுபோக்கு. நேவி பேனா அப்போது பிரபலம். புது பேனா ஒரு வாசனையாகவும், மை ஊற்றி மை ஊற்றி பழசான பேனா ஒரு வாசனையாகவும் இருக்கும்.
கேம்லின் பேனா தேர்வுக்கு தயார் ஆகும் போது அப்பா வங்கித் தருவார். அதை கல் ஒன்றில் ஒரு சைசாக உரசி, தேர்வுக்கு தயார் செய்வது பேனா மன்னனே தான். நங்கள் ஒரு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பேனா ரிப்பேர் செய்து கொடுப்பார். மை கசியும் பேனாவிற்கு கிரீஸ் போடுவது மற்றும் எழுதாத பேனாக்களை எழுத வைப்பது என அவர் செய்யும் வேலைகளை பார்ப்பது மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு.

அவரின் உண்மையான் பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், எங்கே தங்கினார். இதுவும் எனக்கு மட்டும் அல்ல, எங்க அப்பாவுக்கும் தெரிந்திருக்காது என்றே நினைகிறேன்.

July 5, 2010

கவிதை அல்ல கதை, கதை அல்ல நிசம்





















நிசமா தான் சொல்றியா
ஆமாம், எத்தனை தடவை இதையே கேப்ப,
என்னால நம்ப முடியல
ஏன் என்னைய லவ் பன்ற,
உன்னோட இருக்கும் போது நான் சந்தோசமா இருக்கேன்,
சிரிச்சுக்கிட்டே இருக்கேன்,
இது போதாதா, உன்னைய லவ் பண்ண!
என்னக்கு என்னோவோ சந்தேகமா இருக்கு
'போடா லூசு'
இப்போ நம்பிட்டேன்
என்னைய நீ லவ் பண்றத.

இப்படித்தான் ஆரம்பித்தது
நம் இருவருக்கும் இடையேயான 'காதல்'
எல்லாவற்றிலும் நமக்கு அவசரம்,
திருமணத்திற்கு நாள் பார்த்தோம்
அதற்கு முன் கனிமூனிற்கு நாள் குறித்தோம்
அதற்குமுன் பிள்ளைகலுக்கு பேர் வைத்தோம்
ஆனால் விவாகரத்தும் செய்து விட்டோம்
நாம் திருமணம் செய்து இருக்கலாம்

சண்டை சச்சரவுகளோடு நாமும் இரண்டு
குழந்தை பெற்றிருக்கலாம்
ஆனாலும் நமக்கிடையே ஒன்று
ஓடி இருக்கும்
அது தான்
காதல் என்ற ஜீவ நதி

முதல் நாளில் நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன்.
நாம் சிரித்தோம்
நம்மை பார்த்து சிலர்
சிரித்தார்
கடைசியில்
நமக்கிடையே
'புத்தர் சிரித்தார்'

மழை பெய்யும் நாளில் எல்லாம்
உன் விரல்கள் என்னோடு சேர்த்திருக்க
ஒதுங்கி இருப்போம்.
இன்றும் மழை பெய்கிறது
எங்கிருக்கிறாய் நீ




May 25, 2010

வறுமை கொடிது


'வழக்கம் போல பள்ளியோடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் நீராரம் தேடினேன். இல்லை. அம்மா அரிசி வாங்க சென்றிருக்கலாம். இந்த அரிசி வாங்கும் வழக்கம் மட்டும் எங்கள் ஊரில் இல்லாமல் இருந்திருந்தால் நிறைய குடும்பங்கள் தற்கொலை செய்திருக்க வேண்டியதுதான். அரிசி வாங்குதல் என்றால் நீங்கள் நினைப்பது போல் கடையில் காசு கொடுத்து வாங்குதல் அல்ல. அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் கடனாக வாங்குவது. இதற்கென்றே ஒரு ஓலைப் பொட்டி இருக்கும். அனேகமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும். காசு பணம் இருக்குறவுக ஒரு குவிண்டால் அரிசி வாங்கி வருவார்கள். முன்னர் அவர்கள் வாங்கிய கடன் அரிசி எல்லாம் திருப்பி தருவார்கள். ஒரு தடவை வாங்கி வரும் அரிசி, கடன் அரிசி கொடுத்தது போக ஒரு வாரம் வரும். இது பொதுவான 'அரிசியல் விதி'. எல்லோர்க்குமான ஒரு வாரக் கணக்கு எங்களுக்கு இருந்ததில்லை. கடன் வாங்கிய அரிசியை திருப்பி கொடுக்கவே சில சமயம் பத்தாது.

அரிசியே இப்படி என்றால் அடுத்த காய்கறி, குழம்பு எல்லாம் எப்படி இருந்திருக்கும். அந்த ஆடம்பரத்திர்கெல்லாம் வசதி இல்லை. வடி தண்ணீர் குடிப்பதே பேரானந்தமாக இருக்கும். தொட்டுக்கொள்ள கொஞ்சம் பழைய குழம்போ, வெங்காயமோ கிடைத்தால் கூட இரண்டு செம்பு குடிக்கலாம்.
அப்போதெல்லாம் நான் நிறையே சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து தடவை சாப்பிடுவேன்.


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . ஒரு தடவை நான் மூன்று தட்டு சோறு சாப்பிட்டேன். அப்பாவிற்கு சோறு கொஞ்சம் தான் இருந்தது. அம்மா அப்பாவின் முகம் பார்க்க, அவனிற்கு இன்னும் போடு என்று சொல்லி அவரே போட்டது. அதையும் நான் சாப்பிட்டு விட்டுத்தான் தூங்கினேன்.

இயலாமையின் வெளிப்பாடு கோபம் தானே! எப்போதும் காசு கொடுக்கும் அப்பா எப்போதாவது இல்லைடா என்பார். காசு என்றால் பத்து பைசா அல்லது இருவது பைசா. நிறைய இருந்தாலோ, சொந்தக்காரங்க வந்தாலோ ஒரு ருபாய் கிடைக்கும். நன்றாக செலவு செய்யலாம். ஆனால் சில நேரங்களில் காசு இல்லைடா, போடா என்பார். கேட்க மாட்டேன், அழுதால் தருவார் என அடம் பிடித்து அழுவேன். போடுவார் முதுகில் ஒன்னு.

அழுது கொண்டே சாயாக்கடை தாத்தா, மரப் பெஞ்சில் படுத்து தூங்கி விடுவேன். அந்த பெஞ்சின் ஒரு கால் உடைந்து ஒரு பக்கம் அழுத்தினால் இன்னொரு பக்கம் தூக்கும். இப்படி காலால் அழுத்தி, முகத்தால் அழுத்தி விளையாடுவேன். அப்படியே தூங்கி விடுவது வழக்கமானது. அந்த மரப் பெஞ்சின் வாசனை அப்படியே மனதில் இருக்கிறது. ( விவேக் இதை படித்தால் டீ கடை பெஞ்சை நக்கல் செய்ய மாட்டார் )


(தொடருவேன்!)


May 5, 2010

சித்திரை திருவிழா

தங்க குதிரையில் பவனி வரும் அழகர்


ஆடும் சாமிகள் அல்லது சாமியாடிகள்


மண்டபத்தில் இருந்து அழகரை காண செல்லும் போது




பொங்கல் வைக்கும் அம்மாக்கள்


பேரன்பும் பெருங்கோவமும் கொண்ட குல காவல் தெய்வம் மச்சபுள்ளி கருப்பண்ண சாமி கோவில் கும்பாவிஷேகத்தை தொடர்ந்து, சித்திரை திருவிழா திரி எடுத்து சாமீ கும்பிட அழகாபுரி பங்காளிகளால் முடிவு செய்யப்பட்டு இனிதே வழிபாடு செய்யபட்டது.
அதன் பொது எடுக்கப்பட்ட நிழற் படங்கள் உங்களின் பார்வைக்காக.
(தொடரும் )






February 11, 2010

என் அன்பான உறவுகளே

தேவாரம் பாடிய தமிழ் அய்யா மீது பற்று கொண்டு
சிலப்பதிகார வரிகளில் மயங்கி
"எதிர் வீட்டு சன்னலில் எத்தனையோ சட்டைகள்
என் சட்டையில் எத்தனயோ சன்னல்கள்"
புது கவிதை படித்து
தமிழ் மீது காதல் கொண்டு
நாம் மட்டும் என்ன சும்மாவா
கலக்குவோம் நம் தமிழில் என
வந்து விட்டேன் நானும்
சங்கம் வைத்து வளர்த்ததை
லேப்டாப் வைத்து வளர்ப்போம்