பாலாவின் ஒரு வழிப்
பாதை படித்துக் கொண்டிருக்கிறேன். நேற்று அவரின் ஜீவ நதி..பாலாவின் நாவல்களில் பெரும்பாலும்
பொதுப் பண்பாக பெண்கள், அவர்களின் வலிகள், ‘போற்றப் பட வேண்டியதன் அவசியங்கள்’
காணப்படும். பாலாவின் நாவல்கள் அதுவும் மழை பொழிந்து பூமியும் மனமும் குளிர்ந்து
இருக்கும் இந்த நேரத்தில் படிப்பது பரம சுகம்.
பாலாவின் நாவல்கள்
படிக்கும் ஒருவன் அலட்டிக் கொள்ள மாட்டான். மகனோ மகளோ அவனிடம் குளிப்பதற்கும்.
‘கழுவிக்’ கொள்வதற்கும் விரும்புவார்கள். பாத்திரம் விளக்குவான், வீடு கூட்டுவான்,
மொத்தத்தில் தாயுமானவனாய் அவனால் வாழ முடியும். அப்படித் தான் நானும் இருந்தேன்,
இருக்கேன்.. ( இதுக்குப் பேர் தான் சரவணா அலட்டிக்கிறது....)
இன்றும் பாலா (சாரி..
இங்கு வேறு ஒரு பாலாவைப் பற்றி பேசுவதால் இந்த பிளாக்கில் மட்டும் சந்தியா) குளித்து
முடித்தவுடன் பவுடர் பூசி தலையை சீவிக் கொண்டு, அப்பா நான் நல்லா இருக்கேனா என்று
கேட்கிறது. நல்லா இருக்கடா என் செல்லமே என்று சொல்லி விட்டு வேறு வேலை செய்து
கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடை வெளி விட்டு, அப்பா நான் ‘நல்லா இருக்கேனா,
சூப்பரா இருக்கனா’ என்று கேட்கிறது. ஒனக்கு என்னடா தங்கத்துக்கு.. சூப்பரா இருக்க
என்று சொன்னால், அப்ப மொதல்ல ஏன் ‘நல்லா இருக்கேன்னு’ சொன்னீங்க.. என்று
கேட்கின்றது.
குழந்தைகள் நம்மை
மடக்குகின்றனவா.. அல்லது இயல்பாக கேட்கின்றனவா என்று தெரியவில்லை..
ஏதோ ஒரு சக்தி நம்மை
ஆட்டுவிக்கின்றது என்ற எண்ணத்தில் இருப்போர்க்கு பாலாவின் நாவல்கள் பிடித்துப் போக
வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. பொதுவாக கதைகளில் வரும் கருத்துக்கள் அந்த கதை
மாந்தர் பேசுவது போல அமைந்திருந்தாலும் அவை எல்லாம் எழுத்தாளனின் கருத்துக்கள்தான்
என படிப்போர்க்கு தெரியும். எழுத்தாளன் தான் நம்பும் அல்லது தோன்றும் கருத்துக்களை
ஏதாவது ஒரு கதை மாந்தர் பேசுவது போல அமைத்து விட முடியும். ஆனால் பாலாவின்
‘கருத்துக்கள்’ மட்டுமே நாவல் முழுவதும் விரவிக் கிடக்கும்.
அதீத வர்ணனை, காலை
நேர காமம் இவை தவிர்த்து பார்த்தால் பாலாவின் கதைகள் நமக்குள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த
வல்லவை. முக்கியமாக அகல்யா நாவலில் வரும் அகல்யா, பயணிகள் கவனிக்கவும் ‘பாம்
ஸ்குவார்ட்’, பூசு மஞ்சளில் வரும் கதை நாயகன் என நல்ல பாத்திரப் படைப்புகள்
படிப்பவனை பாதிக்காமலா இருக்கும்...
ஒரு வாரமாக ப்ளாக்
எழுதவில்லை. ஒரு வித அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. போன வியாழன் அன்று
இலேசான மழை பெய்து கொண்டிருந்த நேரம் கிண்டி பாலத்தைக் கடந்து கொண்டிருக்கிறேன்.
ஏனோ திடீரென ஊரில் மழை வர(ம்) வேண்டி மழைச் சோறு சாப்பிட்ட ஞாபகம் வருகின்றது. அலுவலகம் சென்றவுடன் அதைப் பற்றி எழுத வேண்டும்
என நினைத்து ஆரம்பித்தும் விட்டேன்.
மழைச்சோறு
கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மழை பெய்யும்
போது ஜன்னல் ஓரம் அமர்ந்து ரசித்தவாறே சோறு சாப்பிடுவது என்று உங்களுக்கு
தோன்றினால்.... இல்லை.... அப்படித் தான் தோன்றும்.. ஏனென்றால் நீங்கள் எல்லாம்
நிலாச் சோறு சாப்பிட்டிருப்பீர்கள். நிலவைப் பார்த்தவாறே சாப்பிடுவது நிலாச் சோறு
என்றால் மழையைப் பார்த்தவாறே சாப்பிட்டால் அது மழைச்...
கொஞ்சம் அவசரமான வேலை
இருந்ததால் அப்படியே சேவ் செய்து விட்டு வீட்டில் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால்
ஆனந்த விகடனில் மழைச்சோறை பற்றிய கதை..
எப்படி இருக்கும்
எனக்கு.. எழுதுனா... ஏங்க.. சொந்தமா எழுதுங்க, காப்பி அடிக்காதீங்க என்று பின்னூட்டம்
வருமே என்ற கவலை வேறு.. சரி வேறு சப்ஜெக்ட் எழுதலாம் என்றால் மனது ஒத்துழைக்கவில்லை.
அதெப்படி நான் எழுத நினைச்சத விகடன் காப்பி அடிக்கலாம்...


