பிளஸ் டூ காலாண்டுத்
தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய போது பள்ளியின் நிர்வாகமே மாறி
இருந்தது. ஏதோ பிரச்சினை காரணமாக தலைமை
ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார். புது தலைமை ஆசிரியராக பி.டி வாத்தியார்
பொறுப்பேற்று இருந்தார். இந்த மாற்றம் எங்களையும் பாதித்தது. பள்ளியின் நுழைவு
வாயில் ஆறு மணிக்கு பூட்டப்பட்டது. இரவில் பள்ளியில் தங்கிப் படிப்பதற்கு அனுமதி
மறுக்கப்பட்டது.
இரவில் பேருக்குத்
தான் பள்ளியில் படிக்கப் போனோமே தவிர தேர்வு அல்லாத நாட்களில் புத்தகம் என்பது தலைக்கு
வைத்துத் தூங்க மட்டுமே பயன்படும். ஹாஸ்டலில் மின்விசிறி வசதி இல்லை. பெரும்பாலான
நாட்களில் லைட்டே எரியாது. இதனால் தூங்குவதற்கு இடம் இல்லாமல் திண்டாட்டம் ஆனது. ஹாஸ்டலில்
தங்கிப் படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே ஊர் அல்லது பக்கத்து ஊர் தான் சொந்த ஊர்.
எல்லாவற்றிலும் ஊழலில் ஊறித் திளைக்கும் இந்தியாவில் இருபது கிலோ மீட்டர் தொலைவில்
வசித்து வருகிறார் என சர்டிபிகேட் வாங்குவதா கடினம்? உள்ளூர் மாணவர்களே பொய்யான
சர்டிபிகேட் கொடுத்து ஹாஸ்டலில் தங்கி இருந்தார்கள். அவர்களில் நிறைய பேர்
சாப்பிட்டவுடன் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். வார்டன், அவரின் ‘சின்ன
வீட்டுக்குச்’ சென்று விடுவார். 'பேய் பங்களா' மாதிரி இருக்கும் ஹாஸ்டலில் நாங்கள்
பத்து பேர் மட்டும் பயத்துடன் தூங்குவோம்.
'ஸ்டடி ஹவர்' இருப்பதனால்
ஸ்கூல் முடிந்து ஏழு மணிக்குத் தான் ஹாஸ்டலுக்கு வருவோம். ஆறு மணிக்கே தட்டில் சோறு போட்டு ரசத்தை
ஊற்றி அதிலேயே துவையலையும் போட்டு மூடி வைத்திருப்பார்கள், சில நாள் மூடாமலும். வெறும்
துவையலை வைத்துக் கொண்டு விரைத்துப் போன ரச சாதத்தை சாப்பிட முடியவில்லை.
சமையல்காரரான ராஜு அண்ணன் சொன்னார். வார்டன் கொள்ளை அடிக்கிறான்பா.. ஓங்க காசு
எல்லாம் சின்ன வீட்டுக்குத் தான் போகுது. ரூல்ஸ் படி அவன் ஓங்க கூடத் தான்
தங்கணும்.. நீங்க சாப்பிடற சாப்பாட்ட தான் அவனும் சாப்பிடனும். ஆனா என்னைக்காவது
இங்க தங்கி இருக்கானா.. இல்ல இந்த சாப்பாட சாப்பிட்டு இருக்கானா.. இவ்வளவு
பேருக்கு சாம்பார் வைக்க அவன் கொடுக்குற பருப்ப பாருப்பா.. இதுல எப்படி ஒங்களுக்கு
ருசியா சமைச்சு போடுறது என்று புலம்பினார்.
இந்த நேரத்தில் தான் 'சைடு டிஷ்' செய்யும் ஐடியாவும் எங்களுக்கு வந்தது. ஹாஸ்டலின் உள்ளேயே ஒரு முருங்கை மரம் இருந்தது. வார்டன் வீட்டுக்குச் சென்றவுடன் நாங்கள் கீரை பறித்து சமையல் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். இது சனி, ஞாயிறு விடுமுறையில் கண்மாயில் தூண்டில் போட்டு மீன் பிடித்து சமையல் செய்து சாப்பிடும் வரை வளர்ந்தது.
ஒரு நாள் முன்னால்
தலைமை ஆசிரியர் மயிலேறி சார் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். எல்லோரும்
வாங்கப்பா என்று வரவேற்று பேசினார். அவர் பேச்சில் விரக்தி இருந்தது. நீங்க
எச்.எம் ஆ இருக்கும் போது ஸ்கூல் நல்லா இருந்தது சார். இப்போ ஸ்கூல் ஆறு மணிக்கே
இழுத்து மூடிடுறாங்க சார்.. என்று சொன்னோம். என்னப்பா பண்றது, நல்லதுக்கே காலம்
இல்ல.. என்னைய வேலையை விட்டு அனுப்பிட்டாங்களே.. என்றதற்கு, நீங்க திரும்பவும்
வருவீங்க சார்.. எல்லோரும் ஒங்களப் பத்தி புரிஞ்சுகிட்டு திரும்பவும்
கூப்பிடுவாங்க என்று சொன்னோம். படிப்பு மற்ற விசயங்களைப் பற்றி கொஞ்சம் பேசி
விட்டு வந்தோம். நன்றி சொல்லிக் கிளம்பும் போது தான் சொன்னார். இது வரை
ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ யாருமே வந்து தன்னைப் பார்ரக்கவில்லை என்றும்
நாங்கள் இப்பொது வந்து பேசியது உண்மையில் தனக்கு ஆறுதலாக இருக்கின்றது என்றும்.
கொஞ்ச நாளிலேயே
அவருக்கு ஸ்கூல் மானேஜ்மென்ட் அழைப்பு விடுத்தது. திரும்பவும் ஹெட் மாஸ்டர் ஆனார்.
எங்கள் வகுப்புக்கு வரும் போதும், வேறு
எங்காவது பார்க்கும் போதும் ஒரு சிரிப்புடன் எப்படி படிக்கிறீங்கப்பா என்று
கேட்பார்.
ஒரு நாள் மணிமேகலை
என்ற எங்கள் வகுப்புத் தோழி சாமன்ட்ரி பாக்ஸ்சை வகுப்பில் மறந்து வைத்து விட்டுச்
சென்று விட்டது. அதை எடுத்த முத்து மாரி அதனை வீட்டில் கொண்டு போய் கொடுப்பதாகச்
சொல்லி எடுத்துச் சென்றான்.
மறுநாள் ஹெட் மாஸ்டர்
அவனை அடி பிண்ணி எடுத்தார். முத்து மாரி தான் சொன்னான் காரணத்தை. பாக்ஸ்சை
கொடுக்கும் போது மணியின் அப்பா இருந்ததாகவும் அவர் எச்.எம் மிடம் போட்டுக்
கொடுத்து விட்டதாகவும்.
எங்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் முத்துமாரிக்கு இதனை நினைவு படுத்துவோம். தினகரன் தான் ஆரம்பிப்பான். நல்லது தானேயா பண்ண.. அதுக்கு ஏன் அவர் அடிச்சார் என்று. முத்து மாரி ஹெட் மாஸ்டரை திட்ட ஆரம்பித்தால் அது அரை மணி நேரக் கச்சேரி தான். சரி.. விடு எப்படியோ மணிமேகலைக்கு ஒன்னப் புடிச்சு போச்சுல்ல என்று அடுத்த பிட்டை போடுவோம். என்ன சோமு சொல்ற.. என்று அதிர்ச்சியுடன் கேட்கும் போது நான் சொல்வேன். படத்துல எல்லாம் பாக்கலயா.. இப்படித்தான் லவ் ஸ்டார்ட் ஆகும்.. மணிமேகலைக்காக அடி வாங்குன இல்ல.. அடுத்த நாள்ள இருந்து அந்தப் புள்ள ஒன்ன ஒரு மாதிரியாத்தான்யா பாக்குது என்று நான் சொன்னதைக் கேட்டு முத்து மாரிக்கு ‘வெள்ளுடை தேவதைகளுடன்' கனவுப் பாட்டு ஒடியிருக்கும். ரொம்ப நாளா புள்ள நம்பினான். நாங்கள் ஒட்டுகின்றோம் என்று தெரியாமலேயே..
ஹாஸ்டல் கட்டிடம்
அந்தப் பருவத்தில் பெய்த மழைக்கு ஒழுக ஆரம்பித்தது. பள்ளிக்கு பஸ்சில் வரும்
எங்கள் வகுப்புத் தோழிகள் ஜெயந்தியும், விஜயலட்சுமியும் எங்களுக்கு டாட்டா
காட்டுவார்கள். வரும் போதும் ஸ்கூல் முடிந்து போகும் போதும்.
அப்படியான ஒரு 'டாட்டா'
நேரத்தில் வேகமாக வீசிய காற்றுக்கு முன் பக்கமிருந்த ஒடுகளில் ஐந்து ஓடுகள் கீழே
விழுந்து உடைந்தன. எங்கள் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. மீதமிருந்த ஓடுகளை
உடைத்து விழ வைத்தோம். இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. காலையில் லோக்கல் நிருபர்
ஒருவரை வரவழைத்து மாலை மலரில் செய்தி வருமாறு செய்தோம். காலையில் அரசு உயர்
அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஹாஸ்டலுக்கு வந்தனர். முதல் நாள் பெய்த மழையில்
முன்னால் இருந்த ஓடுகள் அனைத்தும் நொறுங்கி விழுந்தன என்று சொன்னோம். வார்டன்
பேந்த பேந்த முழிக்கிறார். நாங்கள் சொன்னதையே அவரும் சொன்னார். அவருக்கு வேறு
வழியே இல்லையே.. ஏனென்றால் அவரும் இரவில் ஹாஸ்டலில் தங்கி இருக்க வேண்டும் என்றல்லவா ரூல்ஸ் சொல்கின்றது. அவர் இல்லை என்று
மாற்றிச் சொல்லவே முடியாது. ஆனால் அன்று இரவு எங்களை தனியாக அழைத்து ‘என்ன
நடந்தது.. ஏன் ஓடச்சீங்க’ என்று கேட்டார். காலையில் சொன்னதையே திரும்பவும்
அவருக்கு சொன்னோம். ஆனால் மழைக்கு ஒடஞ்ச மாதிரி தெரியல.. நீங்க தான்
ஓடச்சிருக்கீங்க.. இனிமே நான் ஒங்களோட பேச மாட்டேன். என் மூஞ்சில கூட
முழிக்காதீங்க.. என்றவர் அதற்குப் பின் எங்களுடன் பேசவே இல்லை.
தற்காலிகமாகத்
தங்குவதற்கு பள்ளியில் பயன் படுத்தாமல் இருந்த ஆடிட்டோரியத்தை கொடுத்தார்கள்.
ஹாஸ்டலுக்கு என புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தார்கள். முழு ஆண்டுத் தேர்வு தொடங்கும் போது புதிய
ஹாஸ்டல் கட்டிடத்தின் தளம் போடப்பட்டிருந்தது.
கல் குவாரியில்
ஆனந்தமாகக் குளித்தது, விநாயகா தியேட்டரில் படம் பார்த்தது, நைட் கடையில் சுடச்சுட
இரவு ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு என நேரங்காலம் இல்லாமல் பலகாரம் சாப்பிட்டது, சைக்கிளிலேயே அருப்புக்கோட்டைக்கு வந்து படம் பார்த்தது
என பல நினைவுகள் இன்னும் பசுமையாய் நெஞ்சுக்குள் இருக்கின்றது. டி.சி வாங்கும்
போது மயிலேறி சார் 'வெரி வெரி குட்' என கான்டக்ட் சர்டிபிகேட் கொடுத்தார். அதுவரை அவர் 'குட்' என்று மட்டுமே டி.சி யில் எழுதுவார் என்றும் எங்கள் ஐந்து பேருக்கு மட்டுமே 'வெரி வெரி குட்' என்று எழுதி இருப்பதாகவும் பள்ளியில் சொன்னார்கள்.
மார்க் சீட் மற்றும் டி.சி வாங்கிக் கொண்டு கல்லூரணிக்கு டாட்டா காட்டினேன்.
எஸ்.என் கல்லூரியில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் பார்த்த ப்ரின்சிபால் சுந்தரராஜன் சொன்னார். 'பி.எஸ்.சி பிசிக்ஸ்' கேக்குற.. ஆனா அப்படி ஒன்னும் அதிகமா மார்க் வாங்கலையே.. 'பாட்டனி' எடுத்துக்கோயேன் என்று..
மார்க் சீட் மற்றும் டி.சி வாங்கிக் கொண்டு கல்லூரணிக்கு டாட்டா காட்டினேன்.
எஸ்.என் கல்லூரியில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் பார்த்த ப்ரின்சிபால் சுந்தரராஜன் சொன்னார். 'பி.எஸ்.சி பிசிக்ஸ்' கேக்குற.. ஆனா அப்படி ஒன்னும் அதிகமா மார்க் வாங்கலையே.. 'பாட்டனி' எடுத்துக்கோயேன் என்று..
first wowww... google map ku... sema interesting a na thought....
ReplyDeleteidhai epdi comment panradhu... anupavangalai suvai pada ezhudhi irukinga.. ana pain theriyudhey... ezhuthalanai pakkama iruka mudilaiye saravanan....
sema interesting flow la solirukinga.....
keep rocking...