November 14, 2012

பிரார்த்தனை


எவரிடமும் கை ஏந்த கூடாது
எனபது உங்களின் பிரார்த்தனை.
பிரார்த்தனைப் பாடலே மேரியின்
பிச்சைப் பாத்திரம்.
கைகள் இல்லாமல்
கும்பிடுபவனின் மீது
கவனம் திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றீர்
கண்ணாடியின் வழியாக
ஊடுருவிப் பார்க்கின்றீர்
கண்கள் குருடா, ஏதும் தெரிகின்றதா என்று
உங்களின் ஆய்வுகள்
போலியோ சப்பிய கால்களையும்
சாட்டையால்
அடித்துக் கொள்பவனின் ரத்தத்தையும்
விட்டு வைப்பதில்லை.
கக்கத்தில் இருப்பது
குழந்தையா, பொம்மையா
என ஆய்ந்து
ஒரு ரூபாய் வர(ம்) வேண்டி
பாக்கெட்டை மேய்ந்து
தரும் ஒற்றை ரூபாயில்
தலைமுறைக்கு புண்ணியம்
சேர்க்கின்றீர்.
கைகளில் தரப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட
நோட்டீஸ் தாமாக
விழுமாறு செய்ய
உங்களால் முடிகிறது.
தேடும் ஒரு ரூபாயை  
சீக்கிரம் தேடி முடியுங்கள்
இல்லையேல்  
கடவுள்கள் கடந்து விடக் கூடும்.

2 comments:

  1. wowwwwwwwwww............ kalakirukinga...

    AV ku anupunga.. think solvanam la kandippa varum nu..

    keep rocking...

    ReplyDelete
  2. தேங்க்ஸ். இது அவ்வளவு நல்லா இருப்பதா எனக்கு தோனல, நீங்கள் பாராட்டுவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.

    இதெல்லாம் ஒரு மேட்டர்னு எழுதனுமா என தயங்கி தயங்கியே பல நல்ல சப்ஜெக்ட்ஸ் மிஸ் ஆகி இருக்கின்றது.

    நாளை முதல் மனதில் தோன்றுவதை உடனே எழுத முடிவெடுத்துள்ளேன்.

    ReplyDelete