October 4, 2012

சீமைக்குப் போனேன்



ஒரு நாள் எம் டி யிடம் இருந்து மெயில் வந்தது. ‘பயோ மெடிக்கல் ஷிப்மென்ட்ஸ்’ பற்றி ஒரு பவர் பாயிண்ட் பிரசண்டேசன் தயார் செய்து அனுப்புமாறு.

நானும் அது இன்க்ரீமென்ட் டைம் ஆகையால் எனது திறமை எல்லாம் பயன்படுத்தி மியூசிக் ட்ராக் எல்லாம் சேர்த்து தயார் செய்து அனுப்பி வைத்தேன். அஸ் யூசுவல் எம்.டி க்கு அதை எப்படி ப்ளே செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. மறுநாள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். எனது பாஸ்போர்ட்டை அனுப்பி வைக்குமாறும், விசா வுக்கு அப்ளை பண்ணி சைனாவுக்கு அவருடன் செல்ல வேண்டும் என்றும். எனக்கு இது முதன் முதல் வெளிநாட்டுப் பயணம். ஆனால் தீபாவளி அன்று தான் சீனாவில் செமினார். போவதா வேண்டாமா என்ற குழப்பம். வீட்டில் வழக்கம் போல ‘அப்படி கண்டிப்பா போகனும்னு தாடிக்காரன் சொன்னா, வேலைய ரிசைன் பண்ணிடுங்க’ என்று மீனாட்சி மேடம் உத்தரவு போட்டு விட்டார்கள். ஏற்கனவே சேலரி லேட்டாத் தர்றதால கொஞ்சம் கடுப்போட இருந்தவளுக்கு இது நல்ல சான்ஸ்.

ஆனால் எனக்கு போக வேண்டும் என்ற ஆசையும் இல்லாமல், வேண்டாம் என்ற மனசும் இல்லாமல் வழக்கம் போல ரெண்டும் கெட்டானாக இருந்தேன். எனக்கு என் கம்பெனியில் அதுவும் ஹெட் ஆபீசில் நிறைய எதிரிகள் இருந்தார்கள். எல்லா பிராஞ்ச் ஆபீஸ்களின் பேமென்ட் அப்ரூவல் என்னிடம் தான் இருந்தது. அதாவது எந்த பேமென்ட் ஆக இருந்தாலும் அதுவும் ஹெட் ஆபீஸ் உட்பட எனக்கு மெயில் அனுப்ப வேண்டும் அதுவும் சப்போர்டிங் டாகுமென்ட்ஸ்களோடு.

நான் அப்ரூவல் கொடுத்தால் மட்டுமே எம்.டி பேமென்ட் செக்கில் சைன் பண்ணுவார். இல்லை என்றால் ரிஜெக்ட் தான். இந்தப் பின்னணி எனக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி இருந்தது. எனக்கு என்று ஏதாவது கேட்டால் வேண்டும் என்றே தாமதப் படுத்துவார்கள்.

இருந்தாலும் சீனாவுக்கு செல்ல விசா எடுக்க வேண்டுமானால் மும்பை யில் இருக்கும் தூதரகத்தில் தான் அப்ளை செய்ய வேண்டும். பயணத்திற்கான கடைசி நாள் வரை விசாவும் பாஸ்போர்ட்டும் கைக்கு வந்து சேரவில்லை. யார் இதுக்குப் பொறுப்பு என்று விசாரித்ததில் எனது முதல் எதிரியான ஹெட் ஆபீசில் ஜி.எம் ஆக இருக்கும்  ரஹ்மான் என்று தெரிய வந்தது. இதே ரஹ்மான் ஏற்கனவே ஒருமுறை வேண்டுமென்றே தாமதம் செய்திருக்கிறான். ஆனாலும் அதில் நான் தான் செயித்தேன்.

எனக்கு கஸ்டம்ஸ் எக்ஸாம் எழுத எம்.டி யிடம் ஸ்பான்சர் செய்யுமாறு கேட்டிருந்தேன். அப்போவெல்லாம் நான் எம்.டி யின் குட் புக்கில் இருந்தேன். அதுக்கென்ன சோமு, பேப்பர் அனுப்பி வை. சைன் பண்ணி திருப்பி அனுப்புகின்றேன் என்றார். நானும் பேப்பர் அனுப்பி வைத்தேன். எம்.டி சைன் பண்ணி ரஹ்மானிடம் கொடுத்து கொரியர் அனுப்பசொல்ல அவன் வேண்டும் என்றே அனுப்பவில்லை. கடைசி நாளில் நானே சைன் பண்ணி அப்ளை செய்தும் விட்டேன். ஆனால் ரஹ்மான் அனுப்பிய கொரியர் கடைசித் தேதிக்கு மறுநாள் எனக்கு வந்தது.

அதைப் போலவே விசாவையும் வேண்டும் என்றே பயண தேதி அன்று இரவு ஏழு மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்பி வைத்தான். சீனா விமானத்திற்கு நான் எட்டு மணிக்குள் இன்டர்நேஷனல் டெர்மினலில் இருக்க வேண்டும். ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக எட்டு மணிக்குத் தான் வந்து சேர்ந்தது. அதுவும் ஏதோ செக்யூரிட்டி பிராப்ளம் என்றும் கார்கோ வெளியே வருவதற்கு பத்து மணிக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்தார்கள்.

ஜெட் ஏர்வேஸ் அலுவலக ஊழியனுக்கு நான் தயார் செய்து வைத்திருந்த பிரசண்டேசனை அங்கேயே போட்டுக் காட்டி எப்படியாவது பாஸ்போர்ட் இருக்கும் கவரை மட்டும் கால் மணி நேரத்திற்குள் எடுத்துத் தருமாறும், அப்படி இல்லை என்றால் வேலையே போய்விடும் என்று சொன்னவுடன் அந்த ஊழியன் எடுத்து வந்து தந்து விட்டான்.

அண்ணன் என்னை வழி அனுப்ப வந்திருந்தது.  பைக்கில் கொண்டு வந்து டிராப் செய்தவுடன் காத்திருக்குமாறு சொன்னேன். ஏனென்றால் செக் இன் கவுன்டர் க்ளோஸ் செய்திருந்தால் நானும் வந்து விடுகின்றேன் என்று சொன்னேன்.

ஏறக்குறைய கவுண்டர் க்ளோஸ் செய்யும் நேரத்தில் போய் விட்டேன். அங்கிருந்த ‘பப்ளி’ ப்ளீஸ் செக் வெதர் இமிக்ரேஷன் இஸ் அவைலபில் ஆர் நாட் என்று சொன்னது. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்மா நீ ஒன்னோட வேலைய முதல்ல செய் என்று லக்கேஸ் ஐ போட்டு விட்டு இம்மிக்ரேசன் ஆபீசர் முன் என்ட்ரி ஆனேன். ஒன்னும் சொல்லவில்லை அவர். எதுக்காகப் போறீங்க என்றவுடன் கையில் வைத்திருந்த செமினார் இன்விடேசன் மற்றும் தங்கப் போகும் ஹோட்டல் ஆகியவற்றைக் காண்பித்தேன். இமிக்ரேஷன் முடித்து உள்ளே சென்று வெய்ட்டிங் ஹாலில் உட்கார்ந்து யோசித்தேன். இப்படியே திரும்பி போய்டுவமா? இல்ல சீனா போகலாமா என்று.

அப்போது தான் ரஹ்மான் போன் செய்தான். என்னது! விமானத்த புடிச்சுட்டியா... ஓகே குட் என்றவன் மனதிற்குள் ஓடியிருக்கும்.. என்ன பண்ணாலும் இவன் கடைசியில செயிச்சுடுரானே? வாடா மகனே உன்ன சீனாவுல வச்சுக்கிறேன் என்று..  ஆமாம், எனக்கும் ரஹ்மானுக்கும் ஒரு வாரம் தங்குவதற்கு ஒரே ஹோட்டலில் அதுவும் ஒரே ஒரு டபுள் பெட்ரூம் தான் புக் செய்யப் பட்டிருந்தது. சென்னையிலிருந்து ஹாங்காங் ஒரு விமானம். ஹாங்காங்கிலிருந்து ஷாங்காய் ஒரு விமானம். சென்னை விமானம் ஹாங்காங் தரை இறங்கியது. எனக்கு முதல் அதிர்ச்சி ஹாங்காங்கில் காத்திருந்தது...            

1 comment:

  1. Vareh Vahhhh.... sema interesting presentation.... seat nunila ukkandhu nagam kadichitu pakkara thriller movie mari iruku... wowwww.. kalakitinga..

    waiting to know your adhirchi.... ahhh

    very happy to know en vikatan la unga photo oda blog vara pogudhunu.... eagerly waiting.. epdi adhai editorial stuff a matha poranganu pakka.. adhai padicha neraiya per ungala follow pannalam.. chance iruku..

    adhanala this is the right time for you to modify the look of your blog... indha background konjam sumara dhan iruku... why no you change...

    keep rocking...


    ReplyDelete