January 1, 2013

நீ தானே என் பொன் வசந்தம்




நித்யா வருண் – இவர்கள் ஆறு வயது முதல் இருபத்து நாலு வரை செய்யும் காதல், மோதல், மோதல், காதல்  – இது தான் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ கதை.

வருண் நடுத்தர வர்க்க – பள்ளி விடுமுறைக்கு ஊட்டி, கொடைக்கானல் செல்லும் குடும்பத்தைச் சேர்ந்த பையன்.
நித்யா, விடுமுறைக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா செல்லும் பணக்கார வர்க்கம். முதல் காதல் பள்ளிப் பருவத்தில் சேர்ந்து விளையாடும் போது வருகின்றது. பின் ஏதோ ஒரு காரணத்தால் பிரிகின்றார்கள். திரும்பவும் வேறு பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கின்றார்கள். அப்போது திரும்பவும் காதலிக்கிறார்கள். அப்போதும் பிரிகின்றார்கள்.

கல்லூரியில் ஒரு ‘கல்சுரல்’ ப்ரோக்ராமில் சந்திக்கிறார்கள். இப்போது கொஞ்சம் தீவிரமாக காதலிக்கின்றார்கள். மீண்டும் பிரிகின்றார்கள். வருணின் திருமணத்திற்கு முதல் நாள் மீண்டும் சந்திக்கிறார்கள். மீண்டும் முத்தம் எல்லாம் கொடுத்து திரும்பவும் சேர்கின்றார்கள். மீண்டும் எங்கே பிரிந்து விடுவார்களோ என்ற பயத்துடன் நாங்கள் வெளியே வந்து விட்டோம்.

வருணாக ஜீவா. நித்யாவாக சமந்தா. இருவரின் உடல் மொழி இந்தப் படத்தில் அபாரம். இருவரும் அழகாக இருக்கின்றார்கள். அதுவும் பேச்சிற்கு பேச்சு ‘க்ளுக்’ என்று சிரிக்கும் சமந்தாவின் சிரிப்பு, காதலித்த, காதலிக்கும் ஓவ்வொரு ஆணிற்கும் தத்தம் காதலியை ஞாபகப்படுத்தும்.
தன் வீட்டின் ஏழ்மை சூழ்நிலை தன் அண்ணனிற்கு பெண் பார்க்கும் போது அவர்கள் தர மறுத்து விடும் போது வருணிற்குத் தெரிகின்றது. ( மூன்று பசங்கள் இருக்கும் சிங்கிள் பெட்ரூம் பிளாட் குடும்பத்தில் எப்படி பெண் தருவது...)  அப்பாவின் ஆசையை நிறைவேற்றவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் எம்.பி.ஏ படிக்க முடிவு செய்யும் வருண் கோச்சிங் கிளாஸ் சேர்கின்றான். எங்கே சமந்தாவும் அதே கிளாஸ் சேர்ந்தால் தன்னால் படிக்க முடியாதோ என்று அவளை எம்.பி.ஏ படிக்க வேண்டாம் என்கின்றான்.

படிப்பதற்காக ‘கோழிக் கோடு’ செல்வதற்கு முன் மொட்டை மாடியில் நித்யாவை சந்திக்கும் வருண் தான் மட்டும் செல்வதாக சொல்கின்றான். நித்யா தானும் வருவதாகவும், அங்கே ஏதாவது ஒரு கோர்ஸ் அல்லது வேலையை பார்த்துக் கொள்வதாகவும், மொத்தத்தில் நீ இருக்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும்’ அவ்வளவு தான் என்று காதலின் வயப் பட்டவளாக எல்லாவற்றையும் விட்டு விட்டு காதலின் சரணாகதி ஆகிவிடவே விருப்பம் என ‘மனசு’ விட்டு சொல்கின்றாள். ஆனால் ஐ.ஐ.எம் இல் எம்.பி.ஏ படிப்பு மற்றும் அதன் கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்ட வருணிற்கு நித்யா- நித்யாவின் காதல் தடையாக தெரியவே, ‘கழட்டி விட’ அதுவும் குற்ற உணர்வின்றி கழட்டி விட காரணம் தேடுகின்றான். நித்யா ‘என்னை விட்டு விடு’ என்று வருனிடம் சொல்லும் சூழ்நிலையை உருவாக்கி வெற்றிகரமாக எம்.பி.ஏ முடித்து வேலையிலும் சேர்ந்து விடுகின்றான். இப்போது ‘கல்யாணம்’ என்ற ‘பாக்ஸ்சை’ டிக் செய்ய வேண்டும்.

திரும்பவும் நித்யாவை தேடி வருகின்றான். அவள் தப்பு செய்த மாதிரி- அவள் மட்டுமே தப்பு செய்த மாதிரியும் அவன் காதல் தியாகியாகவும் தோன்றும்படி பேசி, நித்யா தான் செய்த ‘தப்புக்களை’ மன்னித்து தமிழ் சினிமாவின் வழக்கம் போல ‘ என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று வருனிடம் கேட்கின்றாள் என கதை அமைத்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

கௌதமிற்கு ‘சமந்தா’ கிரேஸ். சமந்தாவின் பெயர் நித்யா வாசுதேவ் என்று வருவது கதைக்கு தேவைப்பட்ட பெயர் என்று தோன்றவில்லை.
நித்யாவிடம் வருண் சொல்கின்றான். ‘ என்னோடு கோழிக் கோடு வந்திருந்தால் வெட்டியாக என்னை சுற்றி சுற்றி வந்திருப்பாய். இப்போது பார்.. சுனாமி மறுசீரமைப்பில் வேலை செய்து இந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்துள்ளாய்’ என்று.

அவனை காதலிப்பது ‘வெட்டியாக’ என்று சொன்னவுடனேயே நித்யாவிற்கு ஏதோ ஒன்று புரிந்திருக்க் வேண்டும். ஆனால் ஆம்பிளை டைரக்ட் செய்யும் படம் அவனைப் போலத் தானே இருக்கும் - ஆண்  என்ற ஆணவத்தோடு..

கல்யாணத்திற்கு முதல் நாள் இரவில் தன்னைப் பார்க்க வரும் நித்யாவை ‘இப்போ ஏன் இங்க வந்த’ என்று ஐந்து தடவைக்கு மேல் கேட்கின்றான் வருண்.  தன்மானமும், சுய கௌரவமும் மிக்க நித்யா திரும்பவும் காரில் அவன் வீட்டை சுற்றி வந்து அழுவதாக காண்பித்து அந்த ‘கேரக்டரரை’ கேவலப்படுத்தி விட்டார் கௌதம்.

பெண் என்பவள் ஆணின் மனத்தைப் புரிந்து கொண்டு, ‘தேவை அறிந்து’ சேவை ஆற்றுபவள் என்ற தமிழ் சினிமாவின் பிம்பத்தை மீண்டும் வெளிப் படுத்தும் இன்னொரு சாதாரண தமிழ் சினிமாவை எடுக்க கௌதம் தேவை இல்லையே..

சமந்தாவின் பாத்திரப் படைப்பு கிளைமாக்ஸ் வரை குறையே சொல்ல முடியாது. தனது காரைக் கொடுத்து ஓட்டச் சொல்லும் சமந்தா அவனிற்கு சொல்ல விரும்பியது இதுவாகத் தான் இருக்க முடியும். இனி என்னிடம் இருப்பதெல்லாம் உன்னதும் ஆகும். இந்தக் கார், நான் என எல்லாமே. இனி நீ வேறு, நான் வேறு அல்ல.. நீ இருக்கும் இடத்தில் எல்லாம் நான் இருக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தில் எல்லாம் காதல் இருக்க வேண்டும்.

ஆனால் ஆணின் மனதால் இதனை புரிந்துகொள்ள முடியாது. அது ‘ தன் காதலி, இன்னொரு பையனுடன் சேர்ந்து போஸ்டர் ஒட்டும் போது கூட இருவரையும் ‘கோர்த்துப் பார்க்கும்’. நான் முக்கியமா, அவன் முக்கியமா என்று இப்போதே முடிவு செய் என்று துன்புறுத்தும். வருண் இதை செய்கின்றான். இப்படி ஒரு ஆதர்ச புருசன் இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகின்றானே’ என்று தான் இன்றும் தமிழ் சினிமாவின் ஹீரோயின் கவலைப்படுகின்றாள். அழுது புலம்பி தான் செய்த தவறை (?)மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றாள்.

மூன்று பெண்களுடன் பிறந்திருந்தாலும் ஹீரோயினாக இருப்பதனால் அவள் தன் குடும்பத்தைப் பற்றி கவலைப்படக் கூடாது. அவளின் வேலை ஹீரோ கூப்பிடும் போதெல்லாம் ஓடோடி வருவது மட்டுமே. ஏனென்றால் தமிழ் படத்து ஹீரோயின் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கின்றது. இதில் கௌதமும் சிக்கித் தவிப்பது தான் ஆச்சர்யம்.

பணக்கார வீடுகளில் எல்லாம் ‘எவனாவது கதவைத் திறந்து வந்து பெண்ணை கூட்டிச் செல்லட்டும்' என்று கதவுகளை திறந்தேவா வைத்திருக்கின்றார்கள். வருண் அப்படித்தானே நித்யாவை அவள் வீட்டில் இருந்து கூட்டிச் செல்கின்றான். தன் வீட்டைப் பற்றிக் கவலைப் படும் வருணிற்கு, காதலி வீட்டில் வயதுக்கு வந்த இன்னொரு பெண் இருப்பது தெரியாதா? பணக்கார வீடு என்றால் அவிழ்த்தா விட்டிருக்கிறார்கள்?

தனக்கு நிச்சயம் செய்துள்ள பெண் அந்தத் திருமணம் நின்று போய் விட்டால் என்ன செய்வாள் என்று வருணிற்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வருணின் அப்பாவிற்கும் தெரியாமல் போகின்றது. முதல் நாள் இரவில் தன் பையனை ‘நித்யாவைப்’ பார்க்கச் சொல்லும் அப்பா கௌதம் படங்களில் மட்டுமே வருவார்.

மொத்தத்தில் ஆணாதிக்கத்தை, காதல் என்ற பெயரில் ஆண் என்ற ஒரு இனம், பெண் இனத்திற்கு ஆண்டாண்டு காலமாய் செய்யும் துரோகத்தை, இப்போ சொல்லு, நான் முக்கியமா, இல்லை ...............
இந்த ‘டேஷ்’ இல் இடம் பேரும் பெயர்கள், சம்பவங்கள் வேறு வேறாக இருக்கலாம்.. ஆனால் ஆண்டாண்டு காலமாக பிளாக்மெயில் தொடர்ந்துகொண்டே வருகின்றது.       

படம் பார்க்கலாம். குத்துப் பாட்டு இல்லை. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. பஞ்ச் டைலாக் எதுவும் இல்லை. ‘காற்றில் பறந்து பறந்து சண்டை செய்யும் சாகசக் காட்சிகள் எதுவும் இல்லை.

சமந்தாவின் ‘க்ளுக்’ சிரிப்பும், நடிப்பும் படத்தைப் பார்க்க வைக்கும். ஜீவாவும் நன்றாக நடித்துள்ளார். கதை மட்டும் கொஞ்சம் முற்போக்காக இருந்திருந்தால் படம் ‘வசந்தமாக இருந்திருக்கும் – கசந்திருக்காது..

சாதாரண மசாலா படங்கள் எந்தக் கதையாக இருந்தாலும் கவலைப் பட வேண்டியதில்லை. ஆனால் இப்படம் போன்ற ‘கதை’ ஆதிக்கம் செய்யும் படங்கள் இப்படியான பிற்போக்குக் கருத்தையே திணிப்பது நல்லதல்ல..
படம் பாருங்கள்.. மாற்று கருத்திருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.                              

2 comments:

  1. wowww.... kalakkal vimarsanam... AV laiyum idhey tone la dhan irundhadhu.. sorry gowtham nu end up panirundhanga....

    analum i like Gowtham Menon.. avaroda picturization pidikum.. but indha padam not up to the mark nu AV sonnadhala thiruttu CD la kooda pakka muyarchi pannala..

    ore mari padam edutha indha prob dhan.. enga neighbour indha padathai whole family kooda poitu vandhu thalaila thalaila adikitanga... family kooda ukkandhu pakkara padam edukka ivanuku theriyadhanu..... gowtham ku vera neraiya sabam kuduthanga...

    analum r r build up for this movie... evlo neraiya build up kudukaromo avlo padam sodhapala irukum...

    neenga naduvula konjam pakkatha kanom pathingala... woww great movie.. konjam slow... sila edam nagarama still a iruku.. matha padi interesting....

    keep rocking..

    ReplyDelete
  2. Thanks. naduvula.....CD irukku.. aaana innum pakkala, pathuttu solren..

    ReplyDelete