‘சரவணா.. யாருக்கும் சொல்லாம மெதுவா வந்து கதவ தொறயேன்’ என்று சுரேஷ் அண்ணன் மொபைலில் சொன்ன போது அதிகாலை இரண்டு மணி. பொதுவாக அதிகாலை நேரத்தில் அல்லது அகால நேரத்தில் வரும் மொபைல் அழைப்புக்கள் நம் இதயத்தின் துடிப்பை எகிற வைக்க வல்லவை.
மொபைலில் பெயரைப் பார்த்தவுடன் அலைப்பவரின் பிரச்சினை என்னவாக இருக்கக் கூடும் என மனது ‘பாசிபிளிட்டீஸ்’ நோக்கி பயணம் செய்து விடுவது தவிர்க்க முடியாதது. இப்படியான ஒரு அதிகாலை வேளையில் தான் மானாமதுரை மாமா பையன் மாயாண்டி ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த போது ஸ்லாப் பெயர்ந்து மண்டையில் விழுந்து இறந்து போனதாக கால் வந்தது. அதில் இருந்து அதிகாலை ‘கால்கள்’ ஏதோ ஒரு மரணத்தை எதிர் நோக்குவதாக அமைந்து போனது துரதிருஷ்டவசமானது.
என்னாச்சுன்னே? இந்த நேரத்துல என்று அதிர்ச்சியுடன் கேட்டதற்கு ‘வெளில தாண்டா இருக்கேன்’ கதவ தொற என்று சொல்லவும் நான் கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது. ரத்தம் வழியும் கோலத்துடன் இருந்த சுரேஷ் அண்ணனை பார்த்தவுடன் பதறியபடி கேட்டேன். என்னாச்சுன்னே? ஆக்சிடென்ட்டா’ என்று..
ஆமாடா.. பைக்ல வரும் போது... மதுர வயல் பை பாஸ்ல.. உள்ளே வந்த அண்ணன் அழுதது.. எனக்கு பரவால்லடா.. ஆனா.. ஆனா.. கலைஞர் மாப்ள தான்... ரொம்ப அடி பட்டுடுச்சுடா.. ரொம்ப கஷ்டம் பொழைக்கிறது.. என்னோட நேரத்த பார்த்தியா ‘ என்றது. அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதன்னே.. சரியாயிடும் என்று சமாதானத்திற்காக சொன்னேன். இல்லடா தம்பி.. தலயில நல்ல அடி.. கை வச்சு தூக்கும் போது ஏங்கையே ‘உள்ள’ போயிடுச்சு. பின் மண்டையில நல்ல அடி.. ரொம்ப கஷ்டம்டா என்று அழுத அண்ணனை சாமாதானப்படுத்தி கை கால் எல்லாம் கழுவி விட்டு வேறு டிரஸ் போடச் சொல்லி வீட்டில் விட்டு வந்தேன்.
‘கலைஞர் மாமா’ என்று செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மாமாவின் ஒரிஜினல் பெயர் மா. கருணாநிதி. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. எங்க ஏரியாவுல அப்படி ஒரு கலர பாக்கவே முடியாது. சின்னப் புள்ளயா இருக்கும் போது அவர தூக்கி வச்சுக்க பொம்பளைகளுக்குள்ள போட்டி போடுவாகளாம்.
வேஷ்டி கட்டுனார்னா அவ்வளவு அழகா இருக்கும். ‘என்னங்கப்பு மருமகனே’ என்று எங்களை அழைக்கும் மாமாவும் சுரேஷ் அண்ணனும் ஒரே ஆபீஸில் வேலை செய்தார்கள். சம்பவத்தன்று நும்பல் சி.எப்.எஸ் இல் வேலை முடிந்தவுடன் ஒரே பைக்கில் வீட்டிற்கு கிளம்பி இருக்கிறார்கள். நல்ல இருட்டு. பைபாஸ் ரோட்டில் வரும் போது, ரோட்டில் அடி பட்டு இறந்து கிடந்த எருமை மாட்டின் மீது வண்டி ஏறி பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்ததில் இருவருக்கும் அடி. வண்டி ஒட்டியது சுரேஷ் அண்ணன். நல்ல ஸ்பீட்.. தப்பு தப்பு.. கெட்ட ஸ்பீட். பின்னால் அமர்ந்திருந்த மாமாவுக்கு தலையில் நல்ல அடி அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து தீபம் ஹாஸ்பிடலில் பர்ஸ்ட் எய்டு செய்து அப்பல்லோவில் அட்மிட் செய்திருந்தார்கள். ‘கோல்டன் ஹவர்’ எனச் சொல்லப்படும் ஒரு மணி நேரத்திற்குள் அட்மிட் செய்ததால் அவர் உயிரை காப்பாற்றி விட்டார்கள்.. ஆனால்.. ஆனால் எங்கோ கொஞ்சமே கொஞ்சமாக ‘டிஸ்டர்பன்ஸ்’ இன்னமும் இருக்கின்றது. நன்றாக பேசிக் கொண்டிருக்கும் மாமா திடீரென கோபப்படுகின்றார் அல்லது சிரிக்கின்றார். இப்போது சரியாகி விடும் .. ஆறு மாதத்தில் சரியாகி விடும் என்ற காலக் கெடுவெல்லாம் பொய்யாகி விட்டது.
கணவர் எப்படி இருந்தாலும் அவருடன் வாழ்க்கை நடத்த நாம் ஒன்றும் நளாயினி காலத்தில் இல்லை என்றாலும் கட்டிய கணவனுக்கு ‘ஒன்னு’ என்றால் பார்த்துக் கொள்ளக் கூட தயாராக இன்றைய மனைவிமார்கள் இல்லை போல. அத்தைக்கு இவருடன் வாழப் பிடிக்கவில்லை. பிரிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார்கள். மாமாவும் இப்போது இங்கே இல்லை. சொந்தக் கிராமத்திற்கு சென்று விட்டார்.
வாழ்வின் நிலையாமை பற்றி எவ்வளவோ உதாரணங்களை நமக்கு காலம் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தாலும் என்னால் கலைஞர் மாமாவிற்கு நடந்ததை இன்னமும் நம்பவே முடியவில்லை. ஒரு மல்டி நேசனல் கம்பெனியின் இம்போர்ட் செக்சன் இவரின் தலைமையில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் சொந்த வீடு.. மற்றும் சொந்த ஊரில் வாங்கிய சொத்துக்கள், அழகான மனைவி, இல்வாழ்க்கையில் நல் வாழ்க்கை வாழ்ந்ததன் அடையாளமாய் ஒரு ஆண் குழந்தை என ஒரே சீராக போய்க் கொண்டிருந்த வாழ்கையில் இப்படி ஒரு புயல் அடிக்குமா. ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். எனக்கு என்னவோ அவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் ஒவ்வொருவரும் விரும்பிய காரணங்கள் என்றே தோன்றுகிறது.
‘ஊர்ல குல தெய்வம் கோவில் கட்டுனான். பூசாரி, சாமி எறங்கி கட்டக் கூடாதுன்னு சொல்லுச்சு.. ஆனா பெரியவங்க சொல்றத கேக்காம ஆடுனா.. அது தான் அடிச்சுடுச்சு’
‘எல்லாக் காசையும் தானே சாப்பிடனும்னு நெனச்சா.. மத்தவங்க பாவம் சும்மா விடுமா.. அதுக்கு தான் சரவணா சொல்றது.. நாம எப்போதும் அடுத்தவன் வாயில இருக்க கூடாது.. அய்யோ நமக்கு கொடுக்காம இவனே சாப்பிடுறான்னே’.. அப்படின்னு ஒருத்தன் வயிறு எரிஞ்சுச்சுன்னு வச்சுக்க இப்படித்தான் ஆகும்’
அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. விதி.. இப்படித் தான் நடக்கும்னு இருந்தா அத மாத்த யாரால முடியும்’. அவ்வளவு தான்..
இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். எது எப்படியோ சுரேஷ் அண்ணன் மேல் வந்த பழியும் பாவமும் இன்னமும் போக வில்லை. கூட்டிட்டு போயி இப்படி பண்ணிட்டான் என்றுதான் இன்னமும் பேசுகின்றார்கள்.
ஏன் இப்படி நடக்கின்றது. நீ கார்ல தான மாமா சி.எப்.எஸ் வந்த. வீட்டுக்கு கார்லயே போ என்று அண்ணன் சொல்லியும் ‘ஏன் நான் ஒங்கூட வரக் கூடாதா என்று சொல்லி மாமாவை பைக்கில் ஏற வைத்தது எது. ‘ ஊழ் வினை உருத்து வந்து ஊட்டியதா’ ஏன் வாழ்க்கை சில நேரம் சிலரை இப்படி படுகுப்புறத் தள்ளி விடுகின்றது. நிலையாமை பற்றிய பாடமாக மற்றவர்க்கு காட்டவா..
ஆனந்தின் அப்பா நேற்று முன் தினம் இறந்து விட்டார். உடல்நிலை சரி இல்லாமல் ரொம்ப நாள் அவதிப்பட்டார். இனி பார்த்து பிரயோசனமில்லை வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள் என்று டாக்டர் சொல்வதை கேட்பதை விட ஒரு மகனுக்கோ அல்லது மகளுக்கோ துக்கம் தருவது வேறு என்னவாக இருக்க முடியும்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் இறப்பவர்களின் சொந்தக்காரர்களை நடுத் தூக்கத்தில் எழுப்பி கேதம் சொல்வதில்லை. ( போன மனுஷன் போயிட்டார். இப்ப போன் பண்ணி என்ன பண்ணப் போறோம்.. பாவம் எல்லாம் தூங்குங்க.. காலையில சொல்லிக்கலாம்.) ஆனந்தின் அப்பாவும் இன்றைய காலத்தின் கட்டாயத்திர்கேற்ப வெள்ளிக் கிழமை காலை ஆறு மணிக்கு (மறு நாள் பிரதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை) இறந்து போனார்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் இறப்பவர்களின் சொந்தக்காரர்களை நடுத் தூக்கத்தில் எழுப்பி கேதம் சொல்வதில்லை. ( போன மனுஷன் போயிட்டார். இப்ப போன் பண்ணி என்ன பண்ணப் போறோம்.. பாவம் எல்லாம் தூங்குங்க.. காலையில சொல்லிக்கலாம்.) ஆனந்தின் அப்பாவும் இன்றைய காலத்தின் கட்டாயத்திர்கேற்ப வெள்ளிக் கிழமை காலை ஆறு மணிக்கு (மறு நாள் பிரதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை) இறந்து போனார்.
சடங்கு முறைகள் நடந்து கொண்டிருந்தன. ஆனந்தின் அம்மா மட்டும் அழுது கொண்டே எல்லாச் சடங்குகளையும் செய்தார்கள். கடைசியாக அவர்கள் குடும்ப வழக்குப்படி தாலியை கழற்றி இறந்தவரின் வலது கையில் கட்ட வேண்டுமாம். இதைச் சொன்ன வெட்டியானை எல்லோரும் முறைத்தனர். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று ஒரு சிலரும் அதெப்படி மொறைன்னா செய்யத் தானே வேணும் என்று பலரும் சொன்னார்கள். ஒரு பெரியவர் சொன்னார். கடைசி நேரத்துல நாம் மறந்துருவோம்பா.. அதுதேன் வேணாங்கிறேன் என்று. அதற்கு இன்னொருவர் நான் கரெக்டா ஞாபகம் வச்சு வாங்கிடுறேன் என்றார். இப்படியான போட்டிக்கிடையே கேட்டது அரிசி அரிசி என்ற சத்தம்.
இந்த வேலை செய்யும் ஆள்களுக்கு என்றே பொதுப்படையான ஒரு குரல் அமைந்து விடுகின்றது. எல்லா ஊரிலும் அரிசி போடு அரிசி போடு சத்தம் ஒரே மாதிரியாகவே கேட்கின்றது.
துக்க வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ‘ என்னத்த கொண்டு வந்தோம்.. போகும் போது என்னத்த கொண்டு போகப் போறோம்’ என்ற ஞானம் வந்து ‘போவதுண்டு’. அதாவது இறந்தவரை சுடுகாட்டுக்குச் சென்று அடக்கம் செய்யும் வரை வரும். பின்பு போய் விடும். அது தான் வந்து போவதுண்டு என்பதன் அர்த்தம்.
அவர்கள் குல வழக்கப்படி ஆனந்த் (இரண்டாவது பையன்) தாடி, மீசை எடுத்து, ஈர வேட்டியுடன், கொள்ளி வைக்க எல்லோரும் வீடு திரும்பினோம். அந்தக் கோலத்துடன் வீடு திரும்பிய ஆனந்தை பார்த்து அம்மா கட்டிப் பிடித்து கதறி அழுது காதோடு காதாக கேட்டார்கள்.
‘தாலிய பத்திரமா எடுத்து வந்தியா’ என

wowwwwwwwww.......... ipdi arambikalamanu indha blog nu therila.. but really wowwww... neraiya munnaritinga.. unga ezhuthu.. nadai... using proper words ellame ellame kalakkala vandhirukku....
ReplyDeleteஎனக்கு என்னவோ அவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் ஒவ்வொருவரும் விரும்பிய காரணங்கள் என்றே தோன்றுகிறது. - ei idhu really nice pa... kalakitinga...
‘தாலிய பத்திரமா எடுத்து வந்தியா’ என - idhula Sujatha touch theriyudhu..
iyoo... koraiye solla mudilaiyenu feel panren... (nejammmaa)...
keep rocking.......
idhai marandhutene... andha picture sema... r anumashyama iruku
ReplyDelete