கல்லூரி, காதல், கல்யாணம்
ஆப்டர் ஷேவ், பேர் அண்ட் லவ்லி, ஷாம்பூ பாட்டில், பியர்ஸ் சோப், திருநீறு மற்றும் குங்குமம் என அமர்நாத் வைத்திருக்கும் பெட்டி மட்டுமே பூட்டியிருக்கும். மற்ற எல்லோர் சூட்கேசும் ஓபன் தான். அவன் பெட்டியை பூட்டி வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது அவனின் பர்சனல் டைரி. தினமும் ஏதோ ஒன்றை அதில் எழுதி திரும்பவும் உள்ளே வைத்து மறக்காமல் பூட்டியும் விடுவான்.
அமரிடம் மட்டும் புது பிளேடுகள் பாக்கெட் பாக்கெட்டாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மூலையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து பிளேடால் பெருவிரலை கீறிக் கொண்டு அதில் வரும் ரத்தத்தை பேனா நிப்பிளைத் தொட்டு கடிதம் எழுதுவான். ஒரு கடிதம் எழுத அரை மணி நேரம் ஆகும். இரண்டு பிளேடுகள் ஆகும். டேய் பங்காளி.. நீ மட்டும் ரத்த தானம் பண்ணிருந்தா பத்து பேரையாவது காப்பாத்தி இருக்கலாம்.. இப்டி வேஸ்ட் பண்றயடா என்று கிண்டல் செய்தாலும் இதை எல்லாம் அமர் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடிதம் எழுதும் நேரங்களில் வேறு ஒரு உலகில் வாழ்வான். அவனிற்கு வரும் கடிதங்களும் ரத்தத்தில் தான் எழுதப்பட்டிருக்கும் அவனின் முகவரியும் கூட.
இப்படியான ஒரு நாளில் ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் சென்றவன் அவனிற்கு வந்த கடிதத்தை பாட்டணி ரெகார்ட் நோட்டில் வைத்துவிட்டு சென்று விட்டான். படம் வரைவதற்காக நோட்டை எடுத்த என் கையில் அந்தக் கடிதம் சிக்கியது.
கொசகொச வென ரத்தத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கடைசி வரி மட்டும் தெளிவாக இவ்வாறாக இருந்தது. ‘வரும் வாரத்தில் அவர் வேலை விசயமாக திருப்பூர் செல்கின்றார். நீ வீட்டிற்கு வா.. என்று. அது வரை அமர்நாத் மீது நாங்கள் வைத்திருந்த மதிப்பு சரியத் தொடங்கிய தருணம் அது. இருந்தாலும் இந்த விஷ(ய)த்தை நாங்கள் தெரியாத மாதிரி நடந்து கொண்டோம் அவன் மனது கஷ்டப் படும் என்று.
இளையராஜாவா ஏ. ஆர். ரஹ்மானா, வாலியா கண்ணதாசனா வைரமுத்துவா என்று எங்கள் நண்பர்களுக்குள் பட்டிமன்றம் அல்லது விவாத மேடை நடைபெறும். ஏதோ ஒரு கோபம் வந்த சமயத்தில் கணேசன் சொல்லி விட்டான். அடுத்தவன் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் எழுதுறவன் எல்லாம் பேச வந்துட்டான்கள் என்று. அமருக்கு தெரிந்து விட்டது.. அவனைப் பற்றி எங்களுக்கு தெரிந்து விட்டது என்றும் கணேசன் குத்திக் காட்டிப் பேசியது அவனைப் பற்றித் தான் என்றும்.
இப்போ சொல்லு மாப்ள என்னோட லவ்வர ஒருத்தன் கல்யாணம் பன்னிருக்கானா இல்ல இன்னோர்த்தன் மனைவிக்கு நான் லெட்டர் போடுறனா.. இது ஒனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் மாப்ள..வேற எவனுக்கும் தெரிய வேண்டாம் என்றான்.
இப்போது இந்த காதல் மன்னன் என்ன செய்கின்றான்.. அதே பெண்ன கல்யாணம் பண்ணிட்டானா.. இல்ல இன்னும் கல்யாணம் ஆகாம தாடி வளர்த்து கே.கே பட்டி தேவதாசா அலையிரானா என்று பார்க்க கம்பம் போய்க் கொண்டிருக்கின்றேன். உடன் வர விருப்பமிருப்பவர்கள் காத்திருங்கள் அடுத்த சண்டே வரை..
அன்று இரவு முழுதும் குடித்துக் கொண்டே இருந்த ‘அமரை’ என்ன சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை.
மாப்ள, தப்பு எம்மேல தாண்டா.. மன்னிச்சுடு அல்லது ரெண்டு அடி அடிச்சுடு. ஏன்டா
இப்டி நாள் முழுதும் குடிச்சிட்டே இருக்க என்றேன்.
மாப்ள.. ஒம்மேல ஒன்னும் வருத்தம் இல்லடா. ஆனா கணேசன் கேட்டாம் பாரு
ஒரு கேள்வி அதத் தாண்டா தாங்கிக்க முடில. செத்துரலாம் போல இருக்குடா மாப்ள
என்றான்.
நான், அமர்நாத், கணேசன் என்று நாங்கள் பத்து பேர் கல்லூரி நண்பர்கள்.
அப்படியே ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் எங்கள் பத்து பேரையும்
அப்படியே வெளியே அனுப்புவது பேராசிரியரின் வழக்கம். ஏனென்றால் நாங்கள் எப்போதும்
பத்து பேராகவே சுற்றிக் கொண்டிருப்போம். எவனோ ஒருவன் மட்டும் சேட்டை செய்தாலும்
என்னப்பா பத்துப் பெரும் வெளியே போறீங்களா இல்ல இவன மட்டும் அனுப்பட்டுமா என்பார்.
இல்ல சார் எல்லோரும் போறோம் என்று பத்து பேரும் கட் அடிப்போம்.
இதில் எனக்கு அமர்நாத் மட்டும் கொஞ்சம் க்ளோஸ் பிரெண்ட்.

ஏனெனில் நான் கவிதைகள் என்று கிறுக்கியவற்றிற்கு எல்லாம் முதலில் லைக்
போடுபவன். இப்டியே நூல் பிடிச்சு சினிமாவுக்கு நீ பாட்டு எழுதணும் மாப்ள என்பான். எப்போதாவது
வரும் நல்ல கவிதைக்கு பஜ்ஜி சமோசா என்று எங்கள் எல்லோர்க்கும் ஸ்பான்சர் செய்பவன்.
வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவன். பேஸ்ட் தீர்ந்து போன நாட்களில் மற்ற எல்லோரும்
செங்கல் போடியையோ அல்லது குச்சியை கொண்டோ கடமை தீர்க்கையில் அவன் மட்டும்
ஸ்டெப்னியாக இன்னொன்று வைத்திருப்பான்.
ஆப்டர் ஷேவ், பேர் அண்ட் லவ்லி, ஷாம்பூ பாட்டில், பியர்ஸ் சோப், திருநீறு மற்றும் குங்குமம் என அமர்நாத் வைத்திருக்கும் பெட்டி மட்டுமே பூட்டியிருக்கும். மற்ற எல்லோர் சூட்கேசும் ஓபன் தான். அவன் பெட்டியை பூட்டி வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது அவனின் பர்சனல் டைரி. தினமும் ஏதோ ஒன்றை அதில் எழுதி திரும்பவும் உள்ளே வைத்து மறக்காமல் பூட்டியும் விடுவான்.
அமரிடம் மட்டும் புது பிளேடுகள் பாக்கெட் பாக்கெட்டாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மூலையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து பிளேடால் பெருவிரலை கீறிக் கொண்டு அதில் வரும் ரத்தத்தை பேனா நிப்பிளைத் தொட்டு கடிதம் எழுதுவான். ஒரு கடிதம் எழுத அரை மணி நேரம் ஆகும். இரண்டு பிளேடுகள் ஆகும். டேய் பங்காளி.. நீ மட்டும் ரத்த தானம் பண்ணிருந்தா பத்து பேரையாவது காப்பாத்தி இருக்கலாம்.. இப்டி வேஸ்ட் பண்றயடா என்று கிண்டல் செய்தாலும் இதை எல்லாம் அமர் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடிதம் எழுதும் நேரங்களில் வேறு ஒரு உலகில் வாழ்வான். அவனிற்கு வரும் கடிதங்களும் ரத்தத்தில் தான் எழுதப்பட்டிருக்கும் அவனின் முகவரியும் கூட.
ஒவ்வொரு திங்கள் கிழமையிலும் போஸ்ட் ஆபீஸ் சென்று அவனிற்கு வரும்
கடிதத்தை அவனே நேரடியாக வாங்கி படித்து விட்டு பெட்டியில் பூட்டி வைத்து விடுவான்.
இப்படியான ஒரு நாளில் ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் சென்றவன் அவனிற்கு வந்த கடிதத்தை பாட்டணி ரெகார்ட் நோட்டில் வைத்துவிட்டு சென்று விட்டான். படம் வரைவதற்காக நோட்டை எடுத்த என் கையில் அந்தக் கடிதம் சிக்கியது.
கொசகொச வென ரத்தத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கடைசி வரி மட்டும் தெளிவாக இவ்வாறாக இருந்தது. ‘வரும் வாரத்தில் அவர் வேலை விசயமாக திருப்பூர் செல்கின்றார். நீ வீட்டிற்கு வா.. என்று. அது வரை அமர்நாத் மீது நாங்கள் வைத்திருந்த மதிப்பு சரியத் தொடங்கிய தருணம் அது. இருந்தாலும் இந்த விஷ(ய)த்தை நாங்கள் தெரியாத மாதிரி நடந்து கொண்டோம் அவன் மனது கஷ்டப் படும் என்று.
இளையராஜாவா ஏ. ஆர். ரஹ்மானா, வாலியா கண்ணதாசனா வைரமுத்துவா என்று எங்கள் நண்பர்களுக்குள் பட்டிமன்றம் அல்லது விவாத மேடை நடைபெறும். ஏதோ ஒரு கோபம் வந்த சமயத்தில் கணேசன் சொல்லி விட்டான். அடுத்தவன் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் எழுதுறவன் எல்லாம் பேச வந்துட்டான்கள் என்று. அமருக்கு தெரிந்து விட்டது.. அவனைப் பற்றி எங்களுக்கு தெரிந்து விட்டது என்றும் கணேசன் குத்திக் காட்டிப் பேசியது அவனைப் பற்றித் தான் என்றும்.
அந்த நாளில் தான் குடித்துக் கொண்டே இருந்தான். சரி விடு மாப்ள.. வா தூங்கலாம்
என்று கூப்பிடும் போது வர மறுத்தான். மாப்ள இவைங்கள விடு மாப்ள நீ மட்டும் என்ன
நடந்ததுன்னு தெருஞ்சிக்க
.
.
விஜி யும் நானும் பிளஸ் டூ ல கிளாஸ் மேட்ஸ். பக்கத்துக்கு வீடு வேற.
என்னைய அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா பிளஸ் டூ முடிச்ச ஒடனே அவளுக்கு கல்யாணம்
பேசினாங்க. அவள் மருந்தக் குடிச்சு செத்துப் போயிடலாம்னா.. ஆனா நாந்தேன் சமாதானப்
படுத்தி நீ கல்யாணம் பண்ணிக்கோ.. நா படிச்சு ஒரு வேலைக்குப் போன ஒடனே ஒன்னைய
கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி வாக்குக் கொடுத்து காப்பாத்தினேன். நா கண்டிப்பா
அவளக் கல்யாணம் பண்ணிக்குவேன் மாப்ள. இன்னும் சொல்லப் போனா அவளுக்கு கொழந்த ஏதாவது
இருந்தா அந்தக் கொழந்தையோட ஏத்துக்குவேண்டா என்று சொல்லும் போது கண்ணீரோடு
உடைந்திருந்தான்.
இப்போ சொல்லு மாப்ள என்னோட லவ்வர ஒருத்தன் கல்யாணம் பன்னிருக்கானா இல்ல இன்னோர்த்தன் மனைவிக்கு நான் லெட்டர் போடுறனா.. இது ஒனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் மாப்ள..வேற எவனுக்கும் தெரிய வேண்டாம் என்றான்.
இப்போது இந்த காதல் மன்னன் என்ன செய்கின்றான்.. அதே பெண்ன கல்யாணம் பண்ணிட்டானா.. இல்ல இன்னும் கல்யாணம் ஆகாம தாடி வளர்த்து கே.கே பட்டி தேவதாசா அலையிரானா என்று பார்க்க கம்பம் போய்க் கொண்டிருக்கின்றேன். உடன் வர விருப்பமிருப்பவர்கள் காத்திருங்கள் அடுத்த சண்டே வரை..
No comments:
Post a Comment