May 26, 2020

சித்தி







சித்தி
வணக்கம் சித்தி
மகாராசனாய் இருப்பா..
அழைக்கும் ஒவ்வொரு
அழைப்பிருக்கும்
மகனை மகாராசனாய்
வாழ வாழ்த்துவது
வெகு இயல்பாய்
பெருமுயற்சி எதுவுமின்றி
பூ மலர்வதை போல
மனதில் மலர்ந்து
வார்த்தை வாழ்த்தாக 
வந்து விடுகின்றது.

ஒவ்வொரு முறையிலும்
ஒரே பேரரசனா
அல்லது வேறு வேறு
தேசத்தின் பேரரசனா
தெரியவில்லை.
அம்மாக்களின்
ஆசைகளுக்கு அளவேது
வேறு வேறு தேசத்தின்
பேரரசனாகவே இருக்கக் கூடும்.

சித்தியின் ஆசிக்காகவேனும்
அடிக்கடி அழைக்க வேண்டும்
அவர்களின் ஆசைக்காகவேனும்
மகாராசனாய் வாழ்ந்து விட வேண்டும். 

No comments:

Post a Comment