“சுழன்றும்
ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உழந்தும் உழவே தலை”
இந்த
உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் விவசாயமே முழு முதல் தொழில், அதனை முன்
வைத்தே மற்ற தொழில்கள் இயங்குகின்றன. எனவே விவசாயம் மட்டுமே உயிர்த்தொழில்.
விவசாயம்
என்பதில் நாற்று நடுவது, உரம் போடுவது, களை எடுப்பது கதிர் அறுப்பது, கட்டு
சுமப்பது என பல வேலைகள் இருந்தாலும் வள்ளுவன் ஏன் ‘ஏர் பின்னது உலகம்’ என்று
உழுவதை மட்டும் குறிப்பிடுகின்றான்.
விவசாயத்தின்
முக்கியமான நிலை, நிலத்தை உழுவது. பயிர் செழித்து வளருமாறு நிலத்தைப் பண்படுத்துவதற்கு
நிலத்தை உழுவது முக்கியமானது. மழை பெய்த
மறு நாளிலோ அல்லது அடுத்த இரண்டு மூன்று நாட்களிலோ நிலத்தை உழ வேண்டும். உழுவதற்கு
என்றே ஒரு ஜோடி மாடுகள் வீட்டில் இருக்கும். அந்த மாடுகள் ஒரே உயரத்தில் ஒரே சக்தி
கொண்டவையாக ஒரு டீம் வொர்க் ஆக வேலை செய்யும்.
விவசாயத்தின்
முதல் நிலை அந்த நிலத்தில் ‘குப்பை அடிப்பது’ என்ற செயலில் இருந்து
ஆரம்பிக்கின்றது. அறுவடை முடிந்து மறு பருவம் வருவதற்குள் அந்த இடைவெளியில்
நிலத்தை விவசாயத்திற்கு தயார் செய்ய, ஒன்று ‘குப்பை அடிக்க வேண்டும்’ அல்லது ‘கிடை
அமத்த வேண்டும். ‘கிடை அமத்துவது’ என்பது ஒரு ஐம்பது செம்மறி ஆடுகளை ஒரு நாள் இரவு
முழுவதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடைய வைப்பது. அந்த இரவு முழுவதும் அந்த
ஆடுகள் போடும் எச்சம் மற்றும் மூத்திரம் நல்ல உரமாகும். தொடந்து அதே இடத்தில் மறு
நாளும் ஆடுகளை அடைய வைத்து ‘உரம் போட’ வைத்து விட்டால் அந்த வருடம் கூடுதலாக ஐந்து
மூட்டை நெல் அறுவடை செய்யலாம். இரவு முழுவதும் அந்த ஆடு மேய்க்கும் ஆட்களுடன்
தங்கி இருப்பதும், அவர்கள் பேசும் கதைகளும் மிகச் சுவாரஸ்யமானவை.
‘குப்பை
அடிப்பது’ என்பது தினமும் மாட்டுத் தொழுவத்தில் இருந்து அள்ளப்பட்ட சாணத்தையும்,
மற்ற தாவர மிச்சங்களையும் ஒரே இடத்தில் கொட்டி வைத்து, அதன் மேல் மண்ணைப் போட்டு
மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அந்தக் கழிவுகள் மக்கிப் போய் நல்ல உரமாக
இருக்கும். அதனை மாட்டு வண்டியில் அள்ளிப் போட்டு, காட்டில் கொட்டி, பரவி விடிவது தான் குப்பை அடிப்பது. இந்த
வேலையும் இரவில் தான் நடக்கும். குப்பையை அள்ளிப் போட்டு வண்டியைக் கிளப்பும் போதே
பழைய பாடல்களும் கிளம்பும். மாடுகள் பழக்கத்தின் காரணமாக ஒரே பாதையில் சென்று
சரியாகக் காட்டுக்குச் சென்று விடும். பெரும்பாலும் பௌர்ணமி இரவுகள் அதற்குப் பின்
வரும் வெளிச்சம் உள்ள நாட்கள் குப்பை
அடிப்பதற்குத் தோதான நாட்கள். மாடுகளின் கழுத்தில் மாட்டியுள்ள சலங்கைச் சத்தமும், எங்கோ தூரத்தில் கேட்கும் பாட்டுச்சத்தமும்,
பௌர்ணமி நிலவுமான சுகமான நாட்கள் அவை. இரவு முழுவதும் வேலை செய்து, அதி காலை
வெதுவெதுப்பான கிணற்று நீரில் குளித்து விட்டு பகலில் தூங்குவது சுகம். அதுவும்
எந்தக் கனவும் இல்லாமல் திருப்தியாகத் தூங்குவது பரம சுகம்.
இந்தக்
குப்பை அடிக்கும் வேலை முடியத் துவங்கும் போது, பருவ மழை தொடங்கி விடும். நிலத்தை
உழுவது இப்போது தான். உழுவதற்கு இரண்டு விதமான கலப்பைகளை பயன்படுத்துவார்கள்.
போஸ் கலப்பை
என்பது அகலமாக உழுவதற்கும் நாட்டுக் கலப்பை என்பது ஆழமாக உழுவதற்கும் பயன்படும்.
விடிகாலை நான்கு மணிக்கெல்லாம் ஊரே பரபரப்பாக எழுந்து மாடுகளைப் பத்திக்கொண்டு
காலையில் குடிக்கும் டீ யுடன் கிளம்பினால் நான்கரை மணிக்கெல்லாம் உழுக ஆரம்பித்து
விடுவார்கள். சிறு வயதில் உழவு தொலைக்கு கஞ்சி கொண்டு கொடுப்பது எங்கள் வேலை.
அப்பா
கஞ்சி குடிக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் உழுகலாம் என்ற நினைப்புடன் ‘ஹேய்’ என்று
மாட்டை அதட்டினால், ‘ நீ போடா சின்னப் பையா... என்னைய அதட்டுற வயசு உனக்கு இன்னும்
வரல’ என்பது போல சட்டையே செய்யாமல் அந்த இடத்தை விட்டு நகராது.. இன்னும் கொஞ்சம்
வேகமாக அதட்டினால் கழுத்தை திருப்பி முட்ட வருவது போல ‘மூஸ்’ என்று செய்யும்..
பயந்து ஓடி வந்தது இன்னும் பசுமையாக நினைவு இருக்கின்றது. ஆனால் ஆறாவது படிக்கும்
போது தனியாக கலப்பை கட்டி உழுக ஆரம்பித்து விட்டேன். முதன் முதலாக உழுது விட்டு
வந்து இரவு தூங்கி காலையில் எழுந்தால் காலை கீழே ஊண்டவே முடியவில்லை. வலி சும்மா
பின்னி பெடல் எடுக்குது. சுடு தண்ணீ வச்சு ஒத்தடம் குடுத்த அப்பத்தா அப்பாவை
திட்டியது. ஏன்டா பச்ச மண்ண, படிக்கிற புள்ளைய உழுக அனுப்பிச்சுட்டு எங்கடா ஊர்
சுத்திட்டு வர்ற என்று. பின்னாளில் கூலிக்கு உழுகக் கூப்பிடும் அளவுக்கு நானும்
ஒரு உழவாளி ஆகி விட்டேன்,
காட்டில்
உழுவது அவ்வளவு சிரமம் இல்லை.. ஆனால் வயலில், கணுக்கால் அளவு தண்ணீரில் உழுவது
அப்போது எனக்கு கடினமான விசயமாக இருந்தது.
முன்னேர்
ஓட்டுவதும் கடினமான விஷயம் தான். பின்னாடி வரும் ஏர்களை கனக்கு வைத்து ‘சால்’
அடிக்க வேண்டும். இதில் எங்கள் ஊர் முனியாண்டியை அடித்துக் கொள்ள வேற ஆள் கிடையாது.
சும்மா ஸ்கேல் வைத்துக் கோடு போட்ட மாதிரி நேராக சால் ஓட்டும் முனியாண்டிக்கு
முன்னித்து ஏர் முனியாண்டி என்றே பட்டப் பெயர் உண்டு. அவர் உழுது போட்ட நிலத்தைப் பார்த்த
யாரும் சொல்லி விடுவார்கள், இது முனியாண்டியின் உழவு என்று. இதே மாதிரி வரப்பு
வெட்டுவதில் கை தேர்ந்த ‘கருப்பு’, நாற்று நடுவதில் ‘அய்யாரெட்டு’ என ஒவ்வொரு
வேலைக்கும் ஒவ்வொரு எக்ஸ்பர்ட் இருந்தார்கள்.
போன வாரம்
கோயம்பேடு போயிருந்தேன். வர்லாம், வர்லாம்... என்று ஒரு லாரிக்கு, பின்னால் வருவதற்கு வழி சொன்ன குரலை எங்கோ கேட்ட
மாதிரி இருக்கவே, திரும்பிப் பார்த்தால் நம்ம முன்னித்து ஏர் முனியாண்டி. என்ன
சித்தப்பு இங்கே... எப்படி இருக்கீங்க என்றால் ஏதோ இருக்கேம்பா... இந்த வண்டியில லோடு
மேனா ஓடிக் கிட்டு இருக்கேன்.. ‘கருப்பு’ திருப்பூர்ல சாயப் பட்டறையில கிடக்கான்.
ஊர்ல விவசாயம் பண்ண முடியலப்பு.. ஊரச்சுத்தி கடன்... மழையும் இல்ல தண்ணியும்
இல்ல.. அது ஆச்சுப்பா... நாலு வருஷம் ஆச்சு...ஊர விட்டு வந்து என்றார்.
என்னாச்சு
சித்தப்பா மாடு வண்டி எல்லாம்.. என்று கேட்டால் அதெல்லாம் வித்தாச்சுப்பா... வயிறு
ஒன்னு இருக்கே.. ஏதோ ஓடிக் கிட்டு இருக்குப்பா என்றவர் வருத்தமாகச் சொன்னது’’’
இங்க என்னப்பா.. டீ கடை நாலு மணிக்கு தொறக்க மாட்டேங்றான். கழுத... இருபது வருசமா
காலையில நாலு மணிக்கு டீ குடிச்சு பழகிப்போச்சா... அது தான் இங்க கஷ்டமா இருக்கு..
என்றார்.
இன்னும்
எத்தனை எத்தனை விவசாய விஞ்ஞானிகள் இந்த நகரத்தில் சுய அடையாளம் தொலைத்து
வயுறுக்காய் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்களோ .. .

nijammana kavalai saravanan.. iyoo.. namba adutha adutha thalaimurai verum mathrai sapte valarra nilaiye erpaduthiduvonu unga blog padichadhum thonudhu.... vivasayam illadha panathai vechikitu enna panradhu....
ReplyDeletekalakittinga... very touching.. paavam kashtam dhan ipdi uyirpoda oru vazhkai vanzhdhu ippa customs, airfreight, insurance nu irukardhu nejammave r r r kashtam... i could feel it..
seekrama saravanan neraiya acre nelam vangi periya pannayara varanum nu nejammave pray pannikaren..
keep rocking...
ippa customs, airfreight, insurance nu irukardhu nejammave r r r kashtam... i could feel it..
ReplyDelete- நான் எழுத நினச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க...வெள்ளிக் கிழமை ஆபரேசன் முடிந்தது.. இரண்டு நாள் வலி.. .எழுத முடியல.. இப்போ ஓகே
iyooooooo......... ippa epdi iruku..... office join panitingala... cha.. not a good friend... hummmm....... marandhey poiten kan pathi kekka.....
ReplyDeletetake care saravanan....
ippo paravalla.... but the blog will continue from Tomorrow.. sorry to inform very late...
ReplyDelete