இது பாலாவின் கதை நேரம்
தேவதை கதை கேட்டு
தூங்கியதில்லை
தேவதையே கதை சொல்லி
தூங்குகின்றேன் இப்போது .
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்
அரண்மனையில் இருக்கும் போது
அவரின் அம்மா வந்தார்களாம்
ஏ ராஜா சாக்லேட் சாப்பிட்டயா
எங்க ஆ... காட்டு என்றார்களாம்
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
சாக்லேட் சாப்பிட்டா சளி பிடிக்கும்னு.. என
பாலாவின் கதைகள்
படு சுவாரஸ்யமானவை.
தேவதை சொல்லும் போது
சிரிக்காமல் கேட்டு வர(ம்) வேண்டும்.
‘குட்டி’ பூச்சாண்டி
‘குட்டி பேய்’ என
பேய் பிசாசுகள் கூட
குட்டி குட்டியாய்
பாலாவின் கதைகளில்
அழகழகாய் மாறுகின்றன
இன்னைக்கு ஸ்கூலா லீவா
கேட்ட படி துயில்
எழும்
குட்டி தேவதைக்கு
எல்லா நாளுமே லீவா
இருந்து விடக் கூடாதா?
மழை பெய்யும் போதெல்லாம்
மனதிற்குள் வேண்டியபடி காத்திருக்கிறேன்
காஞ்சிபுரம், சென்னை
பள்ளிகளுக்கு
விடுமுறை எதிர்பார்த்து
பாலாவை விட ஆவலாய்.
இன்னைக்கும் லீவுடா
இன்னைக்கும் லீவுடா
என்றவுடன்
அடித்துப் பெய்கிறது
மொத்த மழையும்
பாலாவின் முகத்தில்.
.jpg)
hi.. idhu kavidhaiya illa urainadaiyanu sandhegathoda padichu mudichen.. but unga devadhai pathina endha sandhegamume enaku illa.. she is really an angle... cute krishnar...
ReplyDeleteஇன்னைக்கு ஸ்கூலா லீவா கேட்ட படி துயில் எழும்
குட்டி தேவதைக்கு எல்லா நாளுமே லீவா
இருந்து விடக் கூடாதா? - idhu iyya repeat nu thonudhey.. ahhhh
The whole thing expressed the tonnes of love and care behind your words...
keep rocking....
idhu kavidhaiya illa urainadaiyanu sandhegathoda padichu mudichen 'இது சும்மா நச்சுனு இருக்கு. எழதும் போது எனக்கும் வந்தது. ஆனால் சரி செய்ய முடியவில்லை. சரி.. மேல தான் கவிதை நிக்குதே.. அப்புறம் என்ன என்று விட்டு விட்டேன் ( எப்படி சமாளிச்சோம்ல)
ReplyDeleteடெக்னாலஜிய புல்லா கரைச்சு குடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு.. இத விட்டுபுட்டு இந்தப் பொண்ணு இங்க வேலை செய்ய ஆசைப்படுறத என்னன்னு சொல்ல கடவுளே! கடவுளே
டெக்னாலஜிய புல்லா கரைச்சு குடிக்கிற சான்ஸ் கிடைச்சிருக்கு.. - ahhh.. innuma nambala indha ulagam nambudhu... ahhhhh
ReplyDelete