ஏங் கூட பேசாதடா சரவணா? நீ இப்போ பெரிய மனுஷன்
ஆயிட்ட. அது எப்புடிடா அவ்வளவு தைரியம் வந்துச்சு.
இல்ல சித்தி, சித்தப்பா தான் சொன்னார், இங்க
எல்லோரும் ஒண்ணுதான், ஜாலியா இருங்க’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை.
சொன்னா, குடிப்பியாடா நீ. அப்பா, சித்தப்பா எல்லோரும்
குடிக்கிறாங்கன்னா, அவங்க வளப்பு சரி இல்ல. உங்க அப்பத்தா வதவதன்னு பிள்ளைகளைப்
பெத்து போட்டதே தவிர ஒன்னையும் ஒழுக்கமா வளக்கல.
ஆனா நீ ஏங்கிட்ட வளந்தவன்டா, நீயாடா இப்படி
பண்ண, இனிமே ஏம்மூஞ்சியில முழிக்காதடா’ என்று சொன்ன போது கதறி அழுது காலில்
விழுந்திருந்தேன்.
சித்தி என்னைய மன்னிச்சிருங்க, இனிமே தப்பு பண்ண
மாட்டேன். இது தான் கடைசி. ஆனா ஏங்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லாதீங்க சித்தி என்ற
போது சித்தியும் அழுது விட்டார்கள்.
அண்ணா, நீங்க எங்களுக்கு எவ்வளவு ‘அட்வைஸ்’ பண்ணி
இருக்கீங்க, டிவி பாத்துக்கிட்டே இருக்கக் கூடாது, நல்லாப் படிக்கணும்னு.
அப்போவெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும், நம்மளுக்கும் அட்வைஸ் பண்ண
அண்ணா இருக்காங்கன்னு, ஆனா நீங்க எப்படின்னா அப்படி நடந்துகிட்டிங்க? என் கையில்
இருந்த கேமராவ வாங்கி போட்டோ எடுக்குறேன்னு சொல்லி, கேமராவ தலகீழா புடிச்சு போட்டோ
எடுத்தீங்க என்று அழுகையோடு சொன்ன கார்த்திகா எனது பிரியமான தங்கச்சி.
சித்தி கூடப் பேசிக் கொண்டிருப்பது, காலையில்
எழுந்தவுடன் பால் காய்ச்சுவது, சில வேளைகளில் காபி கலந்து கொடுப்பது, காய்
நறுக்கிக் கொடுப்பது என எனது விடுமுறை நாட்களில் முக்கால்வாசி நேரம் சித்தியுடனே
கழியும். அப்போது சித்தி வீட்டில் இரண்டு பசு மாடும், இரண்டு கண்ணுக்
குட்டிகளுமாக, தோட்டம் இருந்தது. எனக்குப் பிடித்த வேலை, மாடு மேய்ப்பதும்,
தோட்டத்தைப் பராமரிப்பதும் ஆகும். மாட்டுக்கு சன் சில்க் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டுவேன். மிச்சம் இருக்கும் நேரங்களில், ரைஸ் மில் போய் மாவு அரைப்பது,
வாக்குவம் கிளீனர் கொண்டு வீட்டைப் பெருக்குவது என சித்திக்கு உதவியாக இருப்பேன்.
அவ்வாறு
என்னைப் பார்த்தவர்களுக்கு ‘பார்ட்டி’ யில் முழுவதுமாகக் குடித்து விட்டு, என்ன
செய்கின்றோம் என்றே தெரியாமல் நடந்து கொண்ட நான் எவ்வளவு அதிர்ச்சியைக்
கொடுத்திருப்பேன்.
ஆனால், ‘சரிடா இனிமே இப்படி பண்ணாத’ என்று ஜஸ்ட
லைக் தட் ஆக திரும்பவும் அதே பாசத்துடன் பார்த்துக் கொண்ட என் சித்தி.
அவன் ஏன் இப்படி கெரங்கிப்போய் இருக்கான்,
நல்லாச் சாப்பிடச் சொல்லு என என்னிடம் எதையும் நேரடியாகச் சொல்லாமல் ‘சித்தி’
மூலமாகச் சொல்லும் சித்தப்பா.
முதல் முறை எழுதிய ‘கஸ்டம்ஸ்’ தேர்வில் பெயில்
ஆன போது, பரவால்ல விடுறா, அடுத்த தடவை பார்த்துக்கலாம், இதுக்குப் போய் ஏன்டா சாப்பிடாம
இருக்க என அன்புடன் அதட்டிய சித்தப்பா.
****
அழகான பொருட்கள் எல்லாம்
உன்னை ஞாபகப் படுத்துகின்றன
உன்னை ஞாபகப்படுத்தும்
பொருட்கள் எல்லாம்
அழகாகவே இருக்கின்றன
என்று முதல் பக்கத்துடன் ஆரம்பிக்கும் டைரி ‘மஞ்சுவுக்கானது’.
எங்க வீட்ல பார்த்தாங்கன்னா அடி பிண்ணிடுவாங்க, நான் தினமும் படிச்சுட்டு கொடுத்துடுறேன்,
நீயே வச்சிரு’ என்று சொன்ன மஞ்சுவுக்காக நான் எழுதிய கவிதைகள் திடீரென ஒரு நாள்
காணோம்.
அடுத்த வாரம் ஊரிலிருந்து அப்பா வந்திருந்தார்.
ஏன்டா, மூணு வருசத்துக்கு ஒரு தடவை ‘கிறுக்குத்தனம்’ பண்ணனும்னு ஏதாவது வேண்டுதலா?
என்று மட்டும் சொல்லிவிட்டு, அன்றே ஊர் திரும்பி விட்டார்.
ஆம், அப்பாவிற்கு ஊரிலிருந்த லவ் தெரியும்.
திடீரென ஒரு நாளில், சென்னைக்கான டிக்கெட்டுடன் வீட்டிற்கு வந்தார். இன்றே நீ
சென்னைக்கு கிளம்பு, அண்ணன் கூட ரூமில் இருந்துக்கோ, அப்படியே வேலை தேடிக்கோ’
என்று யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. அப்படி
சென்னை வந்து மூன்று வருடம் முடியப் போகிறது.
ஊரில் இருந்த போது ஒருநாள் ‘சரவணா இங்க வாடா?
பாக்கெட்ல என்ன என்றவர் கைகளில் கிடைத்தது
‘சிகரட் மற்றும் தீப்பெட்டி’. அப்போது தான் கல்லூரியை முடித்திருந்தேன்.
அதிர்ச்சியுடன் பார்த்தவர் ‘ சரி போ என்று
சொல்லிவிட்டார். ஆனால் அன்று முதல் எனது பாக்கெட்டில், காலை எழுந்தவுடன் பத்து
ரூபாயை வைத்து விடுவார். டீ மற்றும் சிகரட் செலவுக்கு.
என் பையன் ‘மஞ்சு’ன்னு ஒரு பெண்ணை லவ் பண்றான், ஆனா எங்களுக்கு பிடிக்கல, பையனுக்கு நம்ம சொந்தத்துல பாக்கனும்னு தான் ஒங்க வீட்டுக்கு வந்திருக்கோம், நீங்க என்ன சொல்றீங்க என்று எனக்குப் பெண் பார்த்த ‘நேர்மையான’ என் அப்பா.
என் பையன் ‘மஞ்சு’ன்னு ஒரு பெண்ணை லவ் பண்றான், ஆனா எங்களுக்கு பிடிக்கல, பையனுக்கு நம்ம சொந்தத்துல பாக்கனும்னு தான் ஒங்க வீட்டுக்கு வந்திருக்கோம், நீங்க என்ன சொல்றீங்க என்று எனக்குப் பெண் பார்த்த ‘நேர்மையான’ என் அப்பா.
****
யார் சொல்லித் தெரிந்ததோ? இல்லை மீனாவின் அப்பாவே
சொல்லி விட்டாரோ? தெரியவில்லை. ஆனால் என்னிடம் கேட்காமல், எனக்குத் தெரியாமல்
என் மொபைல் போனில் ‘ மஞ்சு’ என்ற பெயர் இருக்கிறதா என ‘ஆராயும்’ மீனா.
****
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லடா, ஆனா உன்னைய
நினச்சா தான் கவலையா இருக்கு, எப்பபோ தான் உனக்கு பொறுப்பு வரப் போகுதோ? இதை என்
அண்ணன் ரமேஷ் சொல்லும் போது மதுரையில் ஒரூ விடுதியில் தங்கி இருந்தோம். சரிண்ணே,
நான் ஒழுங்கா இருக்கேன், இனிமே வேலைக்குப் போறேன் என்று சொன்னது, ஒவ்வொரு முறை
மதுரை செல்லும் போதும் ஞாபகம் வருகின்றது.
ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரு தனியார் பஸ்சில்சென்னையிலிருந்து
மதுரைக்குச் சென்றோம். இருவரும்
பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, அதற்குள் ‘மதுரையே வந்து
விட்டிருந்தது.
ஆம், நானும் என் அண்ணனும் பேசும் போது,
பார்க்கிறவர்களுக்கு நண்பர்கள் மாதிரியே தெரியும். எனக்காக ஒரு காலத்தில் தினமும்
யோசித்தவர், இதுவரை எதற்காகவும் என்னிடம் கோபப்பட்டதில்லை.
****
இன்று வரை வெறும் அண்ணன் என்று நான் சொன்னால்
அது முதலில் சுரேஷ் அண்ணனாகத் தான் இருக்கும். ஊரில் இருக்கும் போது எங்களது
பேச்சு அப்போது நள்ளிரவைத் தாண்டியும் தொடரும். அப்படி எண்ணத்த தான் பேசுவீங்கடா?
இந்தக் கேள்வியை பல பேர் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பார்கள். அண்ணன் சின்ன
வயசிலிருந்தே ஏதாவது புதுசாகச் செய்து கொண்டே இருக்கும். நொங்கு வண்டி, பம்பரம்,
கேரம் போர்ட் காய்ன்ஸ், நீராவியில் ஓடும் படகு என நாங்கள் ஏதாவது ஒன்றைச் செய்து
கொண்டே இருப்போம். எனது எல்லாச் சந்தேகங்களையும் தீர்த்து வைத்த எனது குரு. ( ஆம்,
ஊரில் எங்களை குரு, சிஷ்யன் என்றே கூபிடுவார்கள்)
இப்போதும் மனக் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள
எனக்கு உற்ற தோழன் என் அண்ணன்.
****
திரும்ப ஒருமுறை நான் படிக்க, எனக்கே அருவருப்பாக
இருக்கும் ப்ளாக்கைப் படித்து, 'கொஞ்சம் பாராட்டினா இவனுக்கு எவ்வளவு திமிர்னு
பாரேன், பெரிய சாரு நிவேதிதானு மனசுல நினைப்பு, இவன் ப்ளாக் எல்லாம் படிச்சோம்
பாரு, நம்ம மேல தான் தப்பு இனிமே இந்தப் பக்கமே தல வச்சுப் படுக்கக் கூடாது’ என்று
நினைக்காமல் ‘ படிக்க சங்கடமா இருக்கு
என்று மட்டும் சொன்ன என் பிரியமான தோழி என நான் பார்த்த, பார்க்கும் எல்லோருமே
எப்படி நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
****
இனிமே இப்படிப் பண்ணாத, பண்ணாதடா என்று அப்படியே
கடந்து போய் விடக் கூடிய மனசு எல்லோர்க்கும் எப்படி வாய்த்தது.
நான் பார்த்த எல்லோருமே நல்லவர்களாகவே
இருக்கிறார்களா அல்லது நல்லவர்களை மட்டுமே நான் பார்க்ககிறேனா?
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும்
பெய்யும் மழையாக, வெளியே பெருமழை பெய்கிறது. அன்பெனும் மழையில் நனைய நனைய நடக்கின்றேன்
நான்.

wowwww....... nama nallavangala irundha pakkaravanga ellarume nallavangala than therivanga....
ReplyDeletesema improvement in your writing... keep going..
'நம்ம மேல தான் தப்பு இனிமே இந்தப் பக்கமே தல வச்சுப் படுக்கக் கூடாது’ - idhai pathi marupadi pesinadhala idhai solren..thalai vechi padukka koodadhunu thonala.. but... embarassing a irundhadhu.. charu ezhudhina... i wont mind.. but neenga mattum dhan en vasagi nu solitu.. unga vakrathai (indha sol prayogam valicha sorry) nan padikka kadai virukardhu r r r thappu... i know you will never do this....
keep rocking....
வார்த்தைப் பிரயோகம்
ReplyDeleteவலிக்கத் தான் செய்கிறது
தீயினால் சுடலாம்
ஆனால் இது
சைலென்செர் சூடு
கண்டிப்பாக மா(ற்)றும்
எழுத்தை மட்டுமல்ல
எழுதியவனையும்
sorry again..
Delete