........அப்புறம் ஏன் என்னைய
பெத்தீங்க?
இந்தக் கேள்வியை
நீங்கள் உங்கள் அப்பாவிடம் கேட்டிருக்க மாட்டீர்கள் . ஆனால் நான் கேட்டிருக்கிறேன்.
புது டிரெஸ் வாங்கித் தராத பொங்கல், தீபாவளிப் பண்டிகை நாட்களில், ஹாஸ்டல் பீஸ்
கட்டாத நாட்களில் என நிறைய தடவை.
இந்த உலகத்தின் எந்த
ஒரு தகப்பனையும் கூனிக் குருக வைக்கும் கேள்வி இது. செய்வதறியாது உள்ளுக்குள் உடைந்து,
குடும்பத் தலைவன் என்ற பிம்பம் உடையும் தருணம் அது. இந்தக் கேள்விக்கான பதிலை எந்த
ஒரு தகப்பனாலும் தர இயலாது.
பிடிவாதமாகக் கேட்டு
அழும் போது, இயலாமை தந்த கோபத்தால் அடிக்கும் அப்பா, இந்தக் கேள்விக்கு நிலை
குலைந்து அடிக்காததாலும், எங்கயோ, என்னவோ கஷ்டப் பட்டு, உருட்டிப் பொரட்டி பணம்
தந்ததும், இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்க வைத்தது.
நமது வீடு மட்டும்
ஏன் கஷ்டத்தில் இருக்கின்றது, நம்ம அப்பாகிட்ட மட்டும் ஏன் பணம் இல்லை என்று யோசிக்கும்
வயசு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அப்பா எங்கயோ பணம் வைத்திருக்கிறார்,
ஆனால் நமக்குத் தர மாட்டேங்கிறார் என்று கேனத் தனமாக யோசிக்கும் வயசு. ஆனால்
இல்லாமை தந்த வெறுப்பிலும், இயலாமையின் விரக்தியிலும் அப்பா குடிக்க ஆரம்பித்தார்.
சோறு சமைக்காத, சமைக்க அரிசியும் இல்லாத வீட்டில், பொருள் தேடிச் சென்ற தலைவன்,
போதையுடன் வீடு திரும்பினால், அந்த வீடு தான் வாழும் நரகம். இந்த நரகத்தில் தான்
நான் வாழ்ந்தேன்.
எதற்கும் சண்டை
போடும் அம்மா, குடித்து விட்டு வந்தால் கேட்கவா வேண்டும். கண்ணீர் வழிய வழிய அழுது
கொண்டே பசியுடன் தூங்கிய நாட்கள் அவை.
அப்பாவிற்கு விவசாயம்
ஒத்து வரவில்லை, அம்மாவின் வற்புறுத்தலுக்காக கொஞ்சம் வேலை செய்வார். மிச்சம்
இருக்கும் வேலைகளை அம்மா தான் பார்ப்பார்கள். என்னை வளர்த்தது என் வீடு மட்டுமில்லை.
ஊரே சேர்ந்து ஊட்டி வளர்த்த பிள்ளை நான். என் முகம் பார்த்தே சாப்பிட்டேனா?
சாப்பிடவில்லையா என்று கண்டு பிடிக்கும் பெரியப்பா, இந்தா, இதப் பிள்ளைகளுக்குக்
கொடு’ என்று கடைக்குக் காய்கறி வாங்கச் செல்லும் போதெல்லாம், ஏதாவது தின்பண்டம்
கொடுத்து அனுப்பும் ‘சொக்கநேந்தல்’ பெரியம்மா என நன்றி சொல்ல வேண்டிய நல்லவர்கள்
நிரம்பிய என் ஊர் மட்டும் இல்லை என்றால்........................
நான் கல்லூரியில்
படிப்பதற்காக, தன் படிப்பை விட்டு விட்டு வேலைக்குச் சென்ற அண்ணன், தங்கச்சியின்
திருமணத்திற்கான செலவுக்காக வாயைக்கட்டி, வயுத்தக்கட்டி சீட்டு போட்டு கடனையும் கட்டியது.
அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தோம் என்று பிளாஷ் பேக் சொல்லும் போது சுவாரஸ்யமாகத்
தான் இருக்கின்றது.
ஆனால் அடி வயிற்றில்
ஆறு முதல் பத்து வயது வரை வந்த தீ, அந்த பசித் தீ இப்போதும் திகிலூட்டுகின்றது.
ஆடி மாதத்தில் அடிக்கும், ஊழிக் காற்றும், எங்கும் பஞ்சப் புயல் வீசிய அந்த இளமைப்
பருவமும் தான் இன்னமும் என் மனத்தில் சொல்கின்றது, அதை விடவா இனி நமக்குக் கஷ்டம்
வந்து விடப் போகின்றது என்று.
கடவுளிடம் நான்
வைக்கும் வேண்டுகோள் இது தான். இந்த உலகத்தின் எந்தப் பிள்ளையும், எந்தத் தகப்பனிடமும்,
‘வாங்கித் தர முடியலன்னா அப்புறம் ஏன் என்னப் பெத்தீங்க’.... என்று கேட்கக்
கூடாது. மேலும் தகப்பனால் வாங்கித் தர முடியாதது எது ஒன்றும் இருக்கவே
கூடாது......

iyoo.. bala padichadhula idhai miss paniten.. sorry...
ReplyDeletewoww.. andha veedu super.. en karpanaila irukara veedu mariye... wowww... idhu unga oorla iruka illa net la suttingala!!!..
pidichiruku.. r pidichiruku... semathiya solirukinganu solla maten.. but unmaiya solirukinga.... adichi pidichi munnuku varadhula oru sugam irundhalum... endha kashtamume padama childhood days anubavikardhu dhan best.. idhai nanum yosichiruken....
nanum pray pannikaren...
woww.. innaiku dhan your comment was published nu vandhiruku....
ReplyDeletesariya convey pannaliyo.. semathiya solirukanganu solla matenu ku artham not super nu illa... unmai ya valiyoda solradhai 'semathiya' nu local word potu solla matenu artham..
இந்தப் பயபுள்ள எப்படி எல்லாம் யோசிக்கிறது!!!!!
ReplyDeletenetla suttathu than.. enga veedu innum alaga irukkumnu solla matten.. irunthalum nallath than irukkum..
ReplyDelete