சரவணனுக்கு ஏன்டா என்
நம்பர குடுத்த? என்று சாரதி சித்தப்பா கத்திக் கேட்டுக் கொண்டிருந்தது மேலே மொட்டை
மாடியில் நின்று கொண்டிருந்த எங்களுக்கு கேட்டது. நானும் தேவேந்திரனும் சுரேஷ் அண்ணனைப் பார்க்க சானிடோரியம் சென்றிருந்தோம்.
அன்று மதியம் சாரதி
சித்தப்பாவின் போன் நம்பரை சுரேஷ் அண்ணனிடம் இருந்து வாங்கி போன் பண்ணும் போது,
‘வணக்கம் சித்தப்பா,
நான் சரவணன் பேசுறேன்’ என்றதும், சரி இப்ப என்ன வேணும் என்று கேட்டவுடன்
அதிர்ச்சி அடைந்தேன். கூட இருந்த இளங்கோ சித்தப்பாவிடம் இதைப் பற்றி சொன்ன போது.
மெட்ராஸ்ல இப்படித்தான்பா, யாராவது யாருக்காவது போன் பண்ணா, அவங்களுக்கு ஏதோ ஒன்னு
வேணும்னு அர்த்தம். சும்மா யாரும் யாருக்கும் போன் பண்ண மாட்டாங்க. நீ இப்போ தானே
வந்திருக்க, போகப் போக சென்னையைப் பற்றி புரியும் என்று சொன்னார்கள்.
நான் குடுக்கல, என்று அண்ணன் சொன்னாலும் நீ குடுக்கலன்னா அவனுக்கு எப்படிரா என் நம்பர் தெரியும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்த சித்தப்பா ஊரில் நான் பார்த்த சித்தப்பா இல்லை.
அண்ணன் மொட்டை மாடிக்கு வந்தவுடன், அண்ணே நாங்க கிளம்பறோம் என்று சொன்னவுடன், சித்தப்பா சொன்னத கேட்டயா என்றது. எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கடா, இப்போ பஸ் கிடையாது, காலையில போகலாம் சாப்புட்டுபடுறா என்றது. நான் குடுக்கல, என்று அண்ணன் சொன்னாலும் நீ குடுக்கலன்னா அவனுக்கு எப்படிரா என் நம்பர் தெரியும் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்த சித்தப்பா ஊரில் நான் பார்த்த சித்தப்பா இல்லை.
யாரது, சரவணனா,
எப்பப்பு வந்தீக, ஹாஸ்டல சாப்புடுரீங்களா, இல்லையா, இப்பிடி கெரங்கிப் போய்
இருக்கீங்க என்று கேட்கும் வள்ளி அத்தை எனது நெருங்கிய சொந்தமில்லை. இன்னும்
சொல்லப் போனால் அவர்கள் வேறு ஜாதி. இருந்தாலும் பார்த்தவுடன் அந்த முகத்தில்
தெரியும் மலர்ச்சி இப்போதும் மாறவே இல்லை.
ஆனால் இப்போதெல்லாம்
எந்த வீட்டுக்குச் சென்றாலும் முகத்தை டி.வியில் இருந்து எடுக்காமலேயே வாப்பா,
உட்கார் என்று சொல்லி விட்டு, சிறிய இடைவேளை விடும் நேரத்தில் தான் பேசவே
ஆரம்பிக்கிறார்கள். பெரியோர்களை விடுங்கள். இந்த வாண்டுகள் இருக்கின்றதே, அதுகள்
கூட கண்டு கொள்வதில்லை. ஜாக்கிசான் போடும் இந்த நேரத்தில் நீ ஏன்டா வந்த என்ற
மாதிரி ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்பவும் ஜூலியைப் பார்க்க திரும்பி
விடுகிறார்கள்.
எனது பள்ளிப்
பருவத்தின் பருவ விடுமுறை ஆரம்பிக்கும் போதே, நீ எந்த ஊருக்குப் போற என ஒருவொருக்கொருவர் மாற்றி
மாற்றி கேட்டுக் கொள்வோம். நான் பெரும்பாலும் எனது பெரியம்மா வீட்டிற்குச்
செல்வேன். பெரியம்மா வீடு கொஞ்சம் பெரியது. ஆமாம்! பெரியம்மா வீட்டில் எனக்கு
ஐந்து அண்ணன்கள், இரண்டு அக்கா ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி. பெரியப்பாவிற்கு
போலீஸ் வேலை. வீடும் போலீஸ் காலனியில் என்றால் கேட்கவா வேண்டும் ஆட்டத்திற்கு.
தினம் ஒரு படம், பெரியப்பா வாங்கி வரும் மிட் நைட் பரோட்டாக்கள், அக்காவுடன் கோவில்,
அண்ணன்களுடன் கிரிக்கெட் என தினம் தினம் திருவிழா தான்.
இப்போதெல்லாம் நாம் ஏன்
நமது பிள்ளைகளை மற்றவர் வீட்டுக்கு விடுமுறைக்கோ அல்லது திருவிழாவுக்கோ
அனுப்புவதில்லை.
ரயிலில் பயணம்
செய்யும் போது சிப்ஸ் பாக்கெட் பிரித்து பாலா சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்
கொண்டிருந்த இரண்டு வயது பாப்பாவிற்கு கொஞ்சம் கொடுத்தால் அது வேண்டாம் என்று
சொல்லி விட்டு, கரெக்ட் தானப்பா என்பது போல அதன் அப்பாவைப் பார்க்கின்றது.
அப்பாவின் முகத்தில்
பெருமிதம். எப்புடி வளத்துருக்கோம் பாத்தியா? என்பது போல என்னைப் பார்க்கின்றார்.
இந்த வளர்ப்பிற்குப் பின் எவ்வளவு வன்முறை இருந்திருக்கக் கூடும் என என் மனம்
அஞ்சுகின்றது .
எங்கே மாறிப் போனோம்.
பணம் சம்பாதிக்க வந்த இடத்திலா? இயல்பைத் தொலைத்து விட்டு என்ன வாழ்க்கை
வாழ்கின்றோம். பள்ளிப் பருவத்தில் படித்த அகநானூறும் புறநானூறும் நம் தமிழர்
வாழ்வியல் முறையை, மானமே உயிர் என எண்ணி வாழ்ந்த வீரர்களைப் போல நாமும் வாழ
வேண்டும் என எண்ண வைத்தது. ஆனால் யதார்த்தம் அப்படியே நம்மை புரட்டிப்
போடுகின்றது.
குழவி இறப்பினும்
ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளின் தப்பார்…
ஆளன்று என்று வாளின் தப்பார்…
என்று வாழ்ந்த
கணைக்கால் இரும்பொறையின் துணிவைப் பாடலாகப் படிக்கும் போது, நமது மண்ணின் மகிமை
புரிந்தது. எதிரி நாட்டு மன்னனால் சிறைப் பிடிக்கப்பட்டு, தண்ணீர் கொடு என்று
காவலாளியிடம் கேட்டு, அலட்சியத்தோடு தாமதமாகக் கொண்டு வந்த நீரைப் பருகாமல் உயிர்
விட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை.
இதைப் படிக்கும் போது
எதுவுமே தாமதமாகக் கிடைக்கும் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்
கட்டணம், கல்லூரி விடுதிக் கடடணம் என எல்லாவற்றையும் கடைசி நாளில் அல்லது ஓரு வாரம்
கால தாமதமாகவே கட்ட முடியும்.
அடுத்த வீட்டில்
தங்கிப் படிப்பவர்கள் வாழ்வின் எத்தகைய அவமானத்தையும் தாங்கும் வல்லமை உடையவர்களாக
இருக்கின்றனர் என்று பேஸ் புக்கில் பகிர்ந்து கொண்ட நண்பன் எவ்வளவு பெரிய வலியை
கடந்து வந்திருக்க வேண்டும். புதுப் புத்தகங்கள் வாங்க, நோட்டு வாங்க என பள்ளி
ஆரம்பித்தவுடன் இந்த சங்கடங்களும் ஆரம்பிக்கும். ஓவிய நோட்டு வாங்காததற்காக அந்த
ஒல்லி ஓவிய வாத்தியார் அடித்த குண்டு அடி இன்னமும் வலிக்கிறது. கன்னத்தில் அறைவது
அந்த ஓவியத்தின் ஸ்டைல்.
அனுபவம் இல்லாமலா அவ்வைக் கிழவி சொன்னால். கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்று.

saravanan..... sema touching... indha mari thoughts enakum iruku.. ana oru suyanalathoda 'namba veetu kalyanam' 'satyameva jeyate' mari program podhu yaarume veetuku vara koodadhunu pray panipen.. ahhhhh.... ini konjame konjama thirundhi 'namba veetu kalayanam' ku mattum pray panikaren...
ReplyDeleter vali migundha ilamai ungaldha irundhirukum nu nenaikaren... valiya anubavama pakkara pakkuvamum adhan kuduthiruku...
r nalla flow iruku saravanan... keep rocking....