நீங்கள்
கவனித்ததுண்டா? ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கும் போது?
காசை நாம் டிக்கெட்
கவுண்டரில் உள்ள ‘அவரிடம்’ கையில் கொடுக்க
வேண்டும். ஆனால் டிக்கெட் கொடுப்பவர்கள் டிக்கெட்டையும் மீதி சில்லரையையும் வெளியே
எறிவார்கள். நாம் பொறுக்கிக் கொள்ள வேண்டும். இது ஒன்று இரண்டு இடங்களில் அல்ல,
சென்னையின் எல்லா இடங்களிலும் எல்லா கவுண்டர்களிலும் நடக்கும் விஷயம் தான்.
சிறிய ஓட்டை வழியே சில்லறை
கொடுப்பது மிகவும் கடினம் மற்றும் கூட்ட நேரத்தில் தனித் தனியாக கொடுப்பதுவும்
சிரமம் என்று வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், வெளியே எறிவது சரியான விஷயம் தானா?
இதில் வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவெனில் ‘வாடிக்கையாளர் என்பவர் யார் ? என்ற
மிக நீண்ட விளக்க உரை உள்ள காந்தி படம் போட்ட போஸ்டர் நிறைய ஸ்டேஷன்களில் தொங்க
விட்டுள்ளார்கள்.
இப்படித்தான் ஒரு
நாள் எக்மோர் ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கும் போது, வழக்கம் போல வெளியே எறிந்து
விட்டார் ஒரு பெண். ஏங்க இப்படி தூக்கிப் போடுறீங்க? கையில் கொடுக்க வேண்டியது தானே
என்று மெதுவாகத் தான் கேட்டேன். அந்தப் பெண் ஆமா, ஒங் கையைப் பிடிச்சு கொடுக்கிறேன்,
வந்துட்டான், டிக்கெட் எடுத்துக்கிட்டு போடா’ என்ற எதிர் வினையின் அதிர்ச்சியில்
இருந்து மீளவே வெகு நேரமாகி விட்டது.
அரசு வேலையில்
இருப்பவர்கள் மற்றும் ரயில்வேயில் வேலை செய்பவர்கள் சிடுசிடு மூஞ்சியுடன் தான்
இருக்க வேண்டுமா?
போன வரம் காயத்ரியைப்
பார்த்தேன். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கச் செல்லும் போது டிக்கெட்
கவுன்டரில் இருந்தது என்னுடன் சி எஸ் சி யில் படித்த காயத்ரி. அது காயத்ரி தானா
என்ற சந்தேகத்தில், ஏங்க நீங்க காயத்ரி தானே’ என்று கேட்டேன். ஆமா! அதுக்கு என்ன?
என்று கேட்பாள் என எதிர் பார்க்கவில்லை.
நான் உங்களோடு
கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த சரவணன் என்று சொன்னதற்கு, அப்படியா என்று முகத்தில்
எந்த மாறுதலும் இல்லாமல் கேட்ட காயத்ரியிடம் டிக்கெட் பணத்தைக் கொடுத்தேன்.
இரண்டு ரூபாய் சில்லறை
கொடுங்கள் என்று சொன்னவுடன், பாக்கெட் செக் பண்ணியதில் ஐந்து ரூபாய் காயின்
கிடைத்தது. அதைக் கொடுத்தால் ரெண்டு ரூபாய் கொடுங்கள். இல்லை என்றால் வெளியில்
போய் மாற்றி விட்டு வாருங்கள். நெக்ஸ்ட் என்றவுடன் வந்தது கோபம்.
ஹலோ மேடம், வாட் ஆர்
யு திங்கிங்? ஐ ஹாவ் டு கோ டு ஆபீஸ். இப் யு ஆர் நாட் ஹவிங் த சேஞ்ச், ப்ளீஸ் கீப்
இட் அஸ் எ டிப்ஸ். ஐ வில் நாட் ஆஸ்க்’ என்று எனக்குத் தெரிந்த அறை குறை
ஆங்கிலத்தில் சொன்னவுடன், கொஞ்சம் பயந்து கொண்டே டிக்கெட் கொடுத்தது.
(என்னவோ தெரியவில்லை,
வர வர கோபம் வந்தால் ஆங்கிலத்தில் தான் பேச வருகின்றது(?). காயத்ரிக்கு அதுவும் பேச
வராது என்று தான் எனக்கு தெரியுமே!!!!!!)

woww.... sema flow la ezhudha arambichitinga.. kalakringa saravanan.. keep it up... and photo um opt selection..
ReplyDeletesometimes, kadan vangara language ku than neraiya mariyadhai iruku... i liked your english... ahhhhh
keep rocking...