அப்பாவின் வலப்புறம் இருப்பது சஞ்சய் , இடப்புறம்
ஹேமந்த் (அண்ணன் மகன்)
ஆனால் வாழ்க்கை நாம் நினைப்பது போல மட்டுமே நடப்பதில்லையே.. அப்பாவிற்கு விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம், சித்தப்பா கிணறு வெட்டித் தந்தவுடன் மிகவும் அதிகமானது.
ஒவ்வொரு முறை
ஊருக்குப் போகும் போதும் ஏதாவது ஒரு புதிய மரச் செடியை நட்டு வைத்திருப்பதை
பார்க்கலாம். சின்ன வயதில் இப்போது சஞ்சய் கேட்கும் கேள்விகள் போலவே நானும் தொனத்தொன
வென கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். மிகவும் பொறுமையாக பதில் சொல்வார்.
எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கிராம வழக்கத்தில் எங்களை ஒரு முறை
கூட அப்பா அடித்ததே இல்லை.
வாழ்க்கை நடத்த பணம்
வேண்டும். அந்தப் பணத்தை சம்பாதிக்க வேலைக்கு வந்த நாம், ஒரு கட்டத்தில் வேலை
பார்ப்பதையே வாழ்க்கையாக்கிக் கொள்கின்றோம். இந்த மாற்றம் நம்மை அறியாமலேயே
நமக்குள் நடந்து விடுகின்றது. அதனால் தான் மனைவி உடம்பு சரியில்லாமல்
படுத்திருக்கும்போது, இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு, ராத்திரி ஹாஸ்பிடல்
கூட்டிட்டு போறேன் என்று சொல்ல வைக்கின்றது.
ஆனால் விவசாயம்
சார்ந்த தொழிலில் இப்படி நடப்பதில்லை. நாங்கள் சிறு வயதிலேயே விவசாய வேலைகளைப்
பார்த்தோம். குடும்பமே சேர்ந்து வேலை பார்க்கும் குலத் தொழில் விவசாயம். எங்களின்
பொழுதுபோக்கு எல்லாமே காடுகளிலோ அல்லது வயல்களிலோ தான். அதனால் விவசாய வேலை
செய்வது இங்கே நாம் வேலைக்குச் செல்வது போல அல்ல.
ஊரிலிருந்து ஒரு நாள்
அம்மா போன் செய்தார்கள். அப்பாவுக்கு பூச்சி கடிச்சுருச்சுப்பா. சின்னக்குட்டி
மருந்து கொடுத்திருக்கார் என்று. சின்னக் குட்டி எங்கள் ஊரின் பாம்புக்கடிக்குக்
கூட மருந்து கொடுத்து காப்பாற்றும்
பச்சிலை மருத்துவர். அப்பாவிடம் பேசிய போது தான் மருந்து சாப்பிட்டு வருவதாகவும்
ஒன்னும் பயப்படவேண்டாம் என்றும் சொல்லி விட்டார்கள்.
ஆனாலும் ஹாஸ்பிடலுக்கு
போகுமாறு சொன்னோம். நல்ல பாம்பு கடித்தவர்களையே காப்பாற்றிய சின்னக்குட்டி
என்னைக் காப்பாற்ற மாட்டானாப்பா’ என்று சொல்லி மருந்து சாப்பிட்டு, பத்தியம் இருந்து வந்தார்.
அதற்கு அடுத்த நாள்
எனக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்லியது. மதுரையில் ட்ராவல்ஸ்
வைத்துள்ள மாமாவிற்கு போன் செய்து, கார் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் அப்பாவை உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணுமாறு சொல்லிவிட்டு
அன்று இரவே மதுரை செல்ல முடிவு செய்தேன். நான் வருவதை அம்மாவுக்குச் சொல்லி
விடலாம் என்று போன் செய்யும் போது தான், அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது
தான் அப்பா இறந்து போனார்.
ஞானமூர்த்தி சித்தப்பா
அம்மாவிடம் இருந்து போனை வாங்கி அப்பா நம்மள விட்டுட்டு போயிட்டார் என்றார்.
நம்பவே முடியவில்லை. ஒரு மனிதனுக்கு சாவு இப்படித் திடீர் என்று வருமா? கூட
இருக்கும் எல்லோரையும் விட்டு விட்டு எப்படி திடீர்னு.... இப்படி யோசித்துக்
கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் வர, வாய் விட்டு அழுது விட்டேன். ட்ரெயினில் பக்கத்தில்
அமர்ந்திருந்த பெரியவர், ஆம்புள புள்ள அழக் கூடாதுப்பா.. அடுத்து நடக்க வேண்டியத
யோசி. கஷ்டம் தான்.. என்ன செய்றது என்று ஆறுதல் படுத்தினார்.
ஆனால் அன்று தோன்றிய
உள்ளுணர்வு முதல் நாள் வந்திருந்தால் நான் என் அப்பாவைக் காப்பாற்றி இருப்பேன்.
ஏன் வரவில்லை?
வீட்டுக்குப் போய்
பார்த்தால், ‘நான் என் கடமையை முடித்து விட்டேன்.. உங்களிடம் வந்து தங்கி
சாப்பிடும் பலன் எதுவும் எனக்கு வேண்டாம்
என்று தீர்மானித்தவராக, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய என்
அப்பா அந்த அன்புக்கடனை திரும்ப அடைக்கவே முடியாதபடி எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.
காரணங்கள் ஆயிரம்
சொன்னார்கள். மருந்து சாப்பிடும் போது பத்தியம் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு நாளுக்கு முன்பு கருவாட்டுக் குழம்பு
வைக்கச் சொல்லி சாப்பிட்டார். அது தான் அவரின் உயிரைப் பறித்தது என்றும், அவருக்கு
தெரிந்து விட்டது, தான் சாகப் போகிறோம் என்று அதனால் தான் கடைசி விருப்பமாக கருவாட்டுக் குழம்பை வைக்கச் சொல்லி சாப்பிட்டார் என்றும் ஆளாளுக்கு ஒரு காரணம்
சொன்னார்கள். கூடி அழுது, கொண்டு போய் கொளுத்தி விட்டோம்.
ஒரு மனிதன்
எல்லோர்க்கும் நல்லவனாக வாழ்ந்து மறைய முடியுமா? ஆனால் அப்பா அப்படித்தான்
வாழ்ந்து மறைந்தார்.
பையில் காசு
இருந்தால் எல்லோர்க்கும் செலவழித்து, இல்லை என்றால் கூச்சப் படாமல் கேட்டு, என அவர் மட்டும் குழந்தையாகவே வாழ்ந்து
விட்டார். நம் உலகில் பார்த்தோம் என்றால் அவர் பொழைக்கத் தெரியாதவராக
இருந்திருக்கலாம்.. ஆனால் அவர் வாழ்ந்த உலகத்திற்கு நம்மால் போகவே முடியாதபடி நாம் நம் வாழ்க்கைப் பயணத்தைத்
தேர்ந்து எடுத்திருக்கிறோம்.
ஊரில் இருந்து அவர்
இங்கு வந்து தங்கியிருக்கும் போது தினமும் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்தை ஒரே
நாளில் செலவழித்து விடுவார். எல்லாப் பேரன்களுக்கும், மருமகள்களுக்கும் சாக்லெட்
வாங்கிக் கொடுப்பார்.
மறு நாள் ஆபீஸ் கிளம்பும்
போது ஒரு சின்னப் பையன் போல என் முகத்தையே பார்ப்பார். என்னப்பா என்று கேட்டால் ‘செலவுக்கு
காசு குடுப்பா’ என்பார். நேத்து குடுத்த இருநூறு ரூபாய் அதுக்குள்ள செலவு
பண்ணிட்டீங்களா? என்று கேட்டால், எவ்வளவு சாக்லேட் வாங்க வேண்டியிருக்கு.. காலி
ஆயிடுசுப்பா என்று சிரித்தபடி சொல்லும் போது நிசமாகவே ஒரு குழந்தையின் அழகு
இருக்கும்..
ஊரில் பாம்பை, பாம்பு
என்று சொல்ல மாட்டார்கள். பூச்சி என்று தான் சொல்வார்கள். நல்ல பாம்பைக் கூட நல்ல
பூச்சி என்று தான் சொல்வார்கள்.
ஆனால் அப்பாவை பூச்சி
ஏதோ கடிச்சிடுச்சுப்பா என்று அம்மா சொன்ன போது, ஏதோ பூச்சி தான் கடிச்சிருக்கும்
போல என்று என்னை நினைக்க வைத்தது இந்த வேலையின், இயந்திரமயமான நகரத்தின்,
மனிதாபிமானம், அன்பு எல்லாம் பார்க்காமல் ரேஸ் குதிரை போல நம்மை ஓட வைக்கும் இந்த
வாழ்க்கை முறையின் வெற்றி..
சொர்க்கம் என்பதும் கடவுள்
என்பதும் உண்மையாக இருந்தால், அப்பா சொர்க்கத்தில் இருப்பார். கடவுளின் பக்கத்தில் இருப்பார்.
கடவுளிடம் காசு வாங்கி அவரின் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் சாக்லெட் வாங்கிக்
கொடுத்துக் கொண்டு...
iyoo.. nenache pakkala saravanan.. unga ella vakyamum present tense laiye irundhadhu... nalla aathmakkalai ellam kadavul r seekramave than kita kooptukaren... really sorry about your appa... oru fulfilled life vazhdhurukar...
ReplyDeleteungappa pathi ezhudha solli marandha vishayangalai gnabaga paduthitena.. r r r sorry....
engamma kooda ippa illa... she is a wonderful woman... engamma nu sollala.. ungappa mariye dhan enga kudumbathula yaar pudhusa vandhalum engamma dhan avangalukku first friend... sagarthukku mundhina naal trachea pannadhala avangalala pesa mudila.... saigaila ezhudhanum nu solli paper pen vangi... Nanri nu ezhudhi kamichanga... dr yarukumma nu ketathukku.. dr. nurse nu ellaraium kai kamichanga... next day she was no more.... puchhhh.... r seekraman.. 56 years dhan..
They will be with us showering their love and affection saravanan...
Love your appa very much.... avara nerla pakkanum nu nenachen... enakum chocolate vangi kuduthirupar... missed...
sorry saravanan for making you remember and cry...
உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அப்பாவைப் பற்றி திரும்பவும் இவ்வளவு விசயங்களை நினைவு படுத்தியதற்கு.. அழுவதும் நல்லது தானே... அப்பாவைப் பற்றி எழுதும் போது ஏனோ கடந்த காலத்தில் எழுதத் தோணவில்லை.
ReplyDeleteநீங்கள் சொல்வது சரி தான்.. நல்லவர்களை கடவுளுக்கும் பிடிக்கும். கஷ்டப் பட்டது போதும்.. என் பக்கத்தில் வந்து இரு என்று கூப்பிட்டுக் கொள்கிறார்.
"ஆனால் அப்பா அவர் இருக்கும் வரை அப்பத்தாவை அம்மா என்று தான் அழைத்தாரே தவிர சின்னம்மா என்று கூப்பிட்டதே இல்லை"
இந்த வரிகள் மட்டுமே அப்பா இல்லை என்பதை சொல்லுமாறு இருந்தது.. அனால் படிக்கும் போது இதற்கு அந்த அர்த்தத்தை உங்கள் நல்ல மனம் நினைத்திருக்காது
andha line i unga appatha irukara varain nu dhan artham pannen... i never thought that he is no more....
ReplyDeleteapparam oru vishayam... nan next week three days leave apply paniruken.. Quarterly leave i enjoy panna nanga enga oorukku porom.. thanjavur pakkathula Irugarai nu oru gramam.. nalaikku night poitu thursday morg varuvom... thursday office vandhuduven.... r chinna gramam... ana cute a irukum.. nadakkara dhoorathula oru chinna aaru...
adhanala... pinnoottam thursday varai irukadhu... I will catch you on Thursday....
Ok va
ok
ReplyDelete