அந்தத் துரைச்சாணி ஒரு வழியாக அனுமதி கொடுத்திருந்தாலும் அவருக்குக் கீழே பணி புரியும் 'நிலப்பிரபு' அனுமதி மறுத்து விட்டார். வரும் போது ‘சரக்குப்’ பிரிவில் வந்திருந்தால் தான் அவர் அனுமதி கொடுப்பாராம்.
சார், வரும் போது பயணியுடன் சேர்ந்தே வரும் பொருளாக ( Accompanied Baggage) ஆக இருந்தாலும் திரும்ப அனுப்பும் போது கார்கோ மோடில் அனுப்பலாம் என பாலிசி சொல்கின்றதே, அதுவும் இல்லாமல் ATA CARNET என்பதே இந்த மாதிரி பிரச்சினைகளால் தாமதமாகி விடக் கூடாது என்பதற்காகத் தானே! இதில் போய் இவ்வளவு பிரச்சினையா என்று சொன்னவுடன் அவருக்கு ஈகோ தலை தூக்கி விட்டது. வாப்பா ஒக்காந்து எனக்குச் சொல்லிக் கொடு, உங்கிட்ட இருந்து வேலைய எப்படி செய்றதுன்னு கத்துக்கிடுறேன் என்று சொல்லி விட்டார். ஏனென்றால் 'சரிங்க சார்' என்பதையே மறுமொழியாகக் கேட்டுப் பழகி விட்ட அவர் நான் எதிர்த்துப் பேசுவதை ஜீரணிக்க முடியவில்லை. இது தெரிந்து தான் சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்டில் இருந்து பிரிண்ட் எடுத்துச் சென்றிருந்தேன். அதனை காட்டியவுடன் பேச்சு கொஞ்சம் மெதுவாக மாறியது. APPRAISING GROUP வழியாக அனுப்பலாம் என்றாலும் இது PREVENTIVE DEPARTMENT வழியாகத் தான்பா அனுப்ப வேண்டும் என்றும், நேற்று 'XYZ' என்று ஒரு ஏஜென்ட் பைக் ஒன்றை இதே மாதிரி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.
இந்தத் துறையில் எனக்கு இருக்கும் பிளஸ் பாயிண்ட், பெரும்பாலான கம்பனிகளில் ஒரு நண்பன் அல்லது நண்பனுக்கு நண்பன் என எப்படியும் ஒருவராவது வேலையில் இருப்பது தான். அதுவும் இந்த XYZ கம்பெனியில் என் அண்ணனே வேலை பார்ப்பது இன்னும் வசதியாக இருந்தது. முதல் நாள் அனுப்பிய பைக் டாகுமெண்ட் நகலைப் பெற முடிந்தது.
நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு நிறுவனம். லெட்டர் பேடில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து விட்டி அசோக சக்கரத்தை, சிங்க முத்திரையைப் போட்டு விடலாம். அப்படியே ஒரு அரசு அலுவலகத்தில் உள்ள நடைமுறை வழக்கங்கள் என்னவோ அதில் ஒரு குறையும் இல்லாமல் அப்படியே எனது அலுவலகத்தில் இருக்கும். இந்த மாதிரி வித்தியாசமான டாகுமென்ட் வந்தால் ஒன்று பண்ண முடியாது என்று திருப்பிக் கொடுத்து விடுவார்கள் அல்லது அப்படியே ஊறப் போட்டு விடுவார்கள். இதே மாதிரி தான் ஒரு RE- EXPORT டாகுமென்ட்டுக்கும் நேர்ந்தது. ஆறு மாதம் விடா முயற்சியில் அந்த ஷிப்மேன்ட்டுக்கு DBK வாங்கிக் கொடுத்தேன்.
திரும்பவும் வேறு ஒரு லெட்டர் புதிதாக வாங்கி அனுமதிக்கு அனுப்பினால் PREVENTIVE D/C சொன்னார். தம்பி இது நான் பண்ணக் கூடாதுப்பா. பக்கத்துக்குல மேடம் இருக்காங்க பாரு, அவங்க கிட்ட வாங்கிக்கிங்க என்று. ஆகா.. .திரும்ப மொதல்ல இருந்தா என ஜெர்க் ஆனாலும் விக்ரமாதித்யன் வேதாளம் கதை மாதிரி இந்த முறை நான் விடுவதாக இல்லை.
சார் தப்பா நெனைக்கக்கூடாது.. (இவர் ரொம்ப வயசானவர்ங்க.. பாவம் இன்னும் ஆறு மாசத்துல ரிட்டைர் ஆகப் போறாரு) நீங்க தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இன்னொரு கம்பெனிக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கீங்க..இதோ பாருங்க அந்தக் காப்பி என காமித்தவுடன் சிரித்து விட்டார். காப்பிய கையோட கொண்டு வந்திட்டுயா.. சரி லெட்டெர கொடு என வாங்கி பெர்மிஷன் கொடுத்து அவருக்கு கீழே பணியாற்றும் மற்றொரு அதிகாரியின் பெயரைச் சொல்லி அவரிடம் Open Order வாங்கிக் கொள்ளச் சொன்னார்.
அங்கே சென்றால் ரூம் பூட்டி இருந்தது. மறு நாள் அங்கு சென்றால் அவரும் இதையே சொன்னார். எதை.. இது Group Appraiser பண்ண வேண்டிய வேலை என்றும் அவரின் வேலை அல்ல என்றும். வந்தவர் எப்பப் போனார்? போகும் போது ஏன் எடுத்துப் போகவில்லை? இந்த மாதிரி மிக முக்கியமான கேள்விகளை கேட்டார். நம்மிடம் தான் பதில் ரெடியாக இருக்கின்றதே. சார்.. இந்தியாவுக்கு வரும் போது கையோடு எடுத்து வரலாம், ஆனால் திரும்பப் போகும் போது கார்கோ மோடில் தான் போக வேண்டும் என்று சொன்னது அவருக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும்.
சரிப்பா, அப்படியே இருந்தாலும் நாங்க பைக்குக்கு மட்டும் தான் தம்பி பெர்மிஷன் கொடுக்க முடியும் என்றார். சார், அவர் டூரிஸ்ட், அதனால பைக்ல வந்தார், இவர் சைண்டிஸ்ட் அதனால விமானத்துல வந்தார். பைக்ல வந்தவர் பைக்க விட்டுட்டு விமானத்துல போயிட்டார். விமானத்துல வந்த சைண்டிஸ்ட் திரும்பவும் விமானத்துலயே போயிட்டார். ஆக மொத்ததுல ரெண்டு பேருமே அவர்கள் கொண்டுட்டு வந்தத விட்டுட்டு போயிட்டாங்க. நாம திரும்ப அனுப்புறோம், இதில என்ன சார் பிரச்சினை ( அப்பா எவ்ளோ லென்த்தி டயலாக்...) என்று சொன்னவுடன் அதைக் கேட்டுச் சிரித்தவர் அவரின் ஆட்டோக்ராப்பை போட்டுக் கொடுத்தார்.
இனியாவது இத அனுப்பி விட்டுறுங்கப்பா என அந்த Department ஆட்களிடம் கொடுத்தேன். சிரிப்போடு கை கொடுத்து தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டு சனிக்கிழமை முடித்து விடுவதாகச் சொன்னார்கள்.
இன்று முடித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.. இத்தோடு ‘இந்த சுங்கம் என் தங்கம்’ முடிவுக்கு வருகின்றது.

wowwwwww............ great........... great job.....
ReplyDeleteஇந்த சுங்கம் என் தங்கம் - plzz mudichidadhinga.. r interesting a iruku... continue whenever possible...
keep rocking...
thanks
ReplyDelete