April 19, 2013

நேரக் கடத்தல்





விசிறப்படும் காற்றுக்கு

வாகாகப் படுத்துக் கொள்வது

பாலாவின் திறமை.

நேரக் கடத்துலுக்காய்

இருபத்தைந்து வருட

வாழ்க்கையை

இரண்டு மணி நேரத்தில்

பின்னணி இசை இல்லாமல்

பிளாஷ்பேக் ஓட்டிப்

பார்க்கின்றேன்..

வலது கை வளைத்து

தலை வழியாக

இடது காது தொட்ட

ஒன்றாம் வகுப்பு அட்மிஷன்

மரகதத்துடனான

பத்தாம் வகுப்பு சண்டை

முதல் இன்டர்வியூ

எல்லாமும் சேர்ந்து

ஒரு மணி நேரம் வருவதில்லை

மொபைலில் இருக்கும்.

எயட்டீஸ் இளையராஜா

அரை மணி நேரம்

ஓ(ட்)டுகின்றார்

வேர்வையில்

விழித்தெழும் பாலா

சொல்கின்றது

அப்பா ஏ.சி போடு

கரண்ட் இல்லடா,

அப்ப பேனையாவது

போடு.

நம் வீட்டில் மட்டும் தானா

இல்லை இது எல்லோர்க்குமானதா?

கதவு திறந்து

அடுத்தவர் வீடு பார்க்கும் பழக்கம்

அப்படியே  தொடர்கின்றது

பசங்களிடையே பந்தயம்

இன்னைக்கு போகுமா

போகாதா..

பெட் ரெண்டு சாக்லேட்..

எண்ணூறு கோடியில்

எண்ணூரில்

மின் உற்பத்தி நிலையம்

தாங்கி வந்த

தமிழ் பேப்பரை

பத்திரப் படுத்தி வைக்கின்றேன்

இன்று இரவு வீசுவதற்கு..

காற்று சற்றேனும்

அதிகமாக

வரக் கூடும் ..

2 comments:

  1. wowwwwwwwww...........kalakitinga.... idhu sema punch... எண்ணூறு கோடியில் எண்ணூரில் மின் உற்பத்தி நிலையம் தாங்கி வந்த தமிழ் பேப்பரை பத்திரப் படுத்தி வைக்கின்றேன் இன்று இரவு வீசுவதற்கு.. காற்று சற்றேனும் அதிகமாக வரக் கூடும் ..

    engendhu pidichinga andha image.... kalakkal...

    oorukku poitu vandhutingala.. illa oorlendhey indha blog updating a... to my understanding you will be in the village this whole week.. Am i wrong?..


    keep rocking.. indha blog really nice....

    ReplyDelete
  2. sorry!
    நேற்றே வந்து விட்டேன். இந்தக் கவிதை (?) ஊருக்குப் போவதற்கு முன்பு அப்லோட் செய்யப் பட்டது.

    போட்டோ நெட்ல சுட்டது...

    ஊர் வழக்கம் போலவே சூப்பர்ப்... பிளாக் நாளை தொடரும்...

    அப்புறம் தேங்க்ஸ்...

    ReplyDelete