அதே காலகட்டத்தில் தான் தி.ஜா அறிமுகம் ஆனார்.
அவரின் செம்பருத்தி, அம்மா வந்தாள், மரப்பசு ஆகியவை மறக்க முடியாத நாவல்கள்.
அதாவது ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து படிக்க
வேண்டியது. அது பிடித்துப்போனால், அவர் எழுதிய மற்ற புத்தகங்களை தேடிப் படிப்பது. இவ்வரிசையில்
சாண்டில்யன், கல்கி, வண்ணதாசன், ஜெயகாந்தன் என கல்லூரியில் இருந்த புத்தககங்களை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு படித்தேன்.
மூன்று டோக்கனுக்கு மூன்று புத்தகங்கள் எடுத்து மறுநாளே ‘படிச்சுட்டேன்’
என்று திரும்ப கொடுக்கும் போது நூலகர் கேட்டிருக்கிறார், தம்பி நீங்க உண்மையிலேயே
படிக்கிரீங்களா, இல்ல படிக்கிற மாதிரி நடிக்கிறீங்களா என்று.
கல்லூரி முடிந்து விடுமுறையில் இருக்கும் போது,
படிக்க புத்தகம் கிடைக்காது. காசு கொடுத்து வாங்கி படிக்கும் அளவு வசதியும் இல்லை,
அது ஒரு ‘பஞ்ச காலம்’. இதனால் தினசரி பேப்பரை நான்கு மணி நேரம் படிப்பேன். வரி
விளம்பரம், நினைவு அஞ்சலி, வருந்துகிறோம், ‘ கெஜட் அறிவிப்பு ‘ சித்த வைத்தியம் ‘
வாலிப வயோதிக அன்பர்களே! எங்கள் மருந்தை ஒரு மண்டலம் உட்கொண்டால், அதீத சக்தி
பெறலாம்’ போன்றவற்றை சுவாரஸ்யமாக படிப்பதற்கு எனக்கு பொறுமை இருந்தது.
சென்னைக்கு வந்த புதிதில், என் சம்பளப் பணத்தில்
பாதி பழைய புத்தகங்கள் வாங்கவே சரியாய் போய் விடும். என் பையில் அல்லது கையில்
எப்போதும் எதாவது ஒரு புத்தகம் இருந்து கொண்டே இருக்கும்.
அன்று எங்கள் பக்கத்துக்கு வீட்டிலும் ஒரு ‘
பாலா’ பைத்தியம் இருந்தார். என்ன புக் படிச்சுகிட்டு இருக்கீங்க என்று இருவரும்
கேட்டுக் கொள்வோம்.
புத்தகம் படிக்கும் போது எனக்கு யார்
கூப்பிட்டாலும் காதில் விழாது. ஒரு கட்டத்தில் ‘ சரவணா உன்னைய அப்போதிருந்து கூப்பிட்டுட்டு
இருக்கேன், காதே கேட்கலையாடா, காது என்ன செவிடா என்று கோபமாய் சித்தப்பா கேட்கும்
போது, ‘ ஆமா சித்தப்பா, காது சரியாய் கேட்க மாட்டேங்குது என்று பொய் சொல்லி இருக்கேன்.
இந்த வயசுலேயே கதை புத்தகம் படிக்குது, இது எங்க
உருப்படி ஆகப்போகுது என்று என் சொந்தங்கள் என்னை வாழ்த்தி இருக்கின்றன.
இந்த சின்ன வீட்ல சாமான்க வைக்கவே இடமில்ல என்று
என் பதினைந்து வருட புத்தக சேமிப்பை, தேடித் தேடி அலைந்து வாங்கிய என் புத்தகப்
புதையலை, கடைக்காரனிடம் போட்டு பிளாஸ்டிக் குடம் வாங்கிய மனைவியை மன்னித்திருக்கிறேன்,
மிக நீண்ட சண்டைக்குப் பிறகு.
படிக்கும் காலத்தில் ‘குறிஞ்சி மலர்’ அரவிந்தன்
மாதிரி வர வேண்டும் என்று நினைத்தவனை, 'காலம்' என்ற கடவுள் ஆடிய 'விதி' என்னும்
விளையாட்டால் சம்பளத்திற்காகப் போராடும் சராசரி சென்னைவாசியாக மாற்றியது.
இப்போதும் திருத்திக் கொள்ள அல்லது மாற்றிக்
கொள்ள முடியவில்லை, புத்தகம் படிக்கும் பழக்கத்தை.
எனது ஆசை எல்லாம் ஒன்று தான். சொந்தமாக கட்டும்
வீட்டில் பெரிய நூலக அறை ஒன்று கட்ட வேண்டும். பகல் முழுவதும் படிப்பு, இரவு முழுவதும்
எழுத்து என நான் விரும்பிய வாழ்க்கை வாழ வேண்டும்.
அதற்கு சில பல காலங்கள் ஆகலாம். எனக்கு வரும்
முதுமை வருடங்களின் வரியாக என்னிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும்,
தெளிவான பார்வை ஒன்றைத்தவிர.
ஏனெனில் நான் படிக்க வேண்டும்.
saravanan... woww... superb nu lam solla maten... i pray god to fulfil your wish of having a huge library in your house...that tooooo sooooooonnnnnnnnnnnnn.......
ReplyDeleteyou hv identified the the crispness of your wiring...
keep going....
gud saravanan, idhey feeling niraya perukku irukku .. enakkum ..
ReplyDelete