‘அப்பு’ இந்தாங்க, என்று அவர் கொடுக்கும்
‘சில்லரைக்காசில்’ மதிய நேரங்களில், சர்க்கரை வள்ளிக் கிழங்கோ, பலாக் கொட்டையோ
வாங்கி சாப்பிடுவேன்.
துரைப்பாண்டி தாத்தா, எங்கள் ஊரின் அடையாளம்.
காங்கிரஸ் கட்சியில் எங்கள் வட்டாரத்தின் முக்கியப் பிரமுகராக இருந்தவர். ஊரில் 'வட்டாரம்' என்று தான் கூப்பிடுவார்கள். காலை எழுந்தவுடன் ஒரு ‘கிளாஸ்’
போட்டு விட்டு, எங்கள் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து, பொரிகடலை சாப்பிட்டுக்
கொண்டிருப்பார்.
அந்தப் பக்கமாக வரும் சிறு பிள்ளைகளுக்கு
கொஞ்சம் பகிர்ந்து கொடுப்பார்.
எங்கள் ஊரில், சாப்பிடும் நேரத்தில் யார் வீட்டுக்காவது
சென்றால் ‘சாப்பிடுங்க’ என்றெல்லாம் 'சொல்ல' மாட்டார்கள். ஒரு தட்டில் சோறு போட்டு
சாப்பிடுங்கப்பு, என்பார்கள்.
'இப்போ தான் அத்த சாப்பிட்டு வர்றேன், வேண்டாம்'
என்றால், சரிடி மாப்ள, உங்க அத்த வச்சிருக்கிற ‘கொழம்பு’ எப்பிடி இருக்குன்னு தான்
பாரேன் என்று செல்லமாக கிள்ளும் சோனை மாமா, இப்போது ஊருக்கு போயிருக்கும் போது கூட
‘மாப்ள பொடி குடு’ என்று ‘மேலே’ கிள்ளியது.
மாமா நீங்க இன்னும் மாறவே இல்லயா என்று சொன்னதற்கும்
வழக்கமாக சிரிக்கும் வெள்ளந்தி சிரிப்பையே பதிலாகத் தந்தது.
என் வீட்டிற்கு அருகே காலை ஆறரை மணிக்கு ரோட்டில்
உட்கார்ந்து சாப்பிடும் ‘பெருமாள்’, ‘சாப்பிடுரயா பாப்பா’ என்று என் பெண்ணைக் கேட்காமல் சாப்பிடுவதில்லை.
அவருடன் ஒரு தெரு நாயும் சாப்பாட்டை பங்கிட்டுக் கொள்கிறது.
எளிய மனிதர்களின் வாழ்க்கை தான் எவ்வளவு இயல்பாக,
அழகாக இருக்கிறது. ( நன்றி -ராஜு முருகன்)
ஆனால் இங்கே, அறிமுகம் இல்லாத அல்லது தூரத்து சொந்தக்காரர்
யாராவது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வந்து விட்டால், உடனே அவசரமாக
மறைத்து வைத்து விட்டுத் தானே ‘வாங்க’ என்று சொல்கின்றோம்.
‘சாப்பிடுங்க’ எனச் சொல்வது உண்மையாகச் சொல்வது
இல்லை என வந்தவர்க்கும் தெரியும் தானே!
‘இப்போதாங்க சாப்பிட்டு வர்றேன்’ என்று அவர் சொல்வது பொய் என்று நமக்கும் தெரியும். இருந்தாலும் நாம் எத்தனை பேரை, இரண்டாவது தடவை ’பரவால்லங்க,
சாப்பிட்டு இருக்க மாட்டேங்க’ கையை கழுவிட்டு உட்கார்ங்க’ என்று சொல்லி
இருக்கிறோம்.
நான் சிறு வயதில் சாப்பிட்டதேல்லாம்
பெரும்பாலும் கூட்டாஞ்சோறு தான்.
நான், சத்தி அத்தை, ஹேமா, ஜெயா அத்தை, சுரேஷ்
அண்ணன் அனைவரும், திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடுவோம். பெரும்பாலும், காலை,
மதியம் இரு நேரங்களிலும் ‘கஞ்சி’ குடிப்போம்.
கருவாடு, கத்தரிக்காய், பச்சை மிளகா-உப்பு,
அய்யர் கடை வடை, ‘சாயாக்கடை தாத்தா’ மொச்சை, ‘சின்ன வெங்காயம்’ என ‘சைடு டிஷ்’ மட்டும் நிறைய இருக்கும்.
இரவு சாப்பாட்டிற்கு யார் வீட்டில் கருவாட்டுக்
குழம்பு, மீன் குழம்பு வைத்திருந்தாலும், எங்கள் வீட்டிற்கு ஒரு சின்ன கிண்ணத்தில்
வந்து விடும். அதைப்போலவே எங்கள் வீட்டிலிருந்தும், கிண்ணங்கள் வெளிச் செல்லும்.
பொதுவாக அம்மா நன்றாகவே சமைப்பார்கள். ‘சரவணா,
குழம்பா கொண்டு வந்த, ஏ ஆத்தா, இன்னும் ஒரு கரண்டி சோறு போட்டு வா, என்று கேட்டுச்
சாப்பிடும், ‘துரைச்சிங்கம் பெரியப்பா’ வீட்டில் தான் நாங்கள் விளையாடுவோம்.
இப்போது நான் 'வசிக்கும்' பார்வதி நகரில் தீபாவளி, பொங்கல் வந்தால், எல்லோர்
வீட்டிலும் பலகாரம் சுடுகிறார்கள், பார்சல் செய்து எல்லோர் வீட்டுக்கும்
கொடுக்கிறார்கள். ஆனால் அத்தனை ‘பார்சல்’ களையும் அதே ‘பேக்கிங்’ பிரியாமல் குப்பை
வண்டி தள்ளி செல்லும் பாண்டி, தீபாவளி முடிந்த அடுத்த வாரத்தில், வீட்டிற்கு
எடுத்துச் செல்வார்.
அவரின் வீட்டிலும் சாப்பிடுகிறார்களோ அல்லது
அவரின் சொந்தக்காரர்களுக்கு ‘பார்சல்’ செய்கிறார்களோ? யாருக்குத் தெரியும்.
hi... correct inga ellama bhavanai dhan... bhavanaigalal pinna matta ulagam.. sapdunga.. saptu vandhen... ellame.. sapdunganu solli saptutomna avlo dhan... adutha vati adhai solla kooda matanga... namba bhavanai saptu vandhen will restore their love.. ahhhhhhhh..
ReplyDeletenija vazhkaila kodi vangamaiye oscar ku thagudhi ana manushanga neriay peru irukanga saravanan...
ingayum bhavanai illadha upasarippu irundhirukku... adhellam oru 15 years back.. nangalum koontanjoru saptrukon in our LIG flat.. Flat ennamo 240 sq feet dhan but manasu r perusa irundha kaalam.. ippa flats lam perusagi manasu kurugidichu....
marakkama raju murugan nu thank panirukinga.. illa nan ketrupen.. engayo padicha mari iruke indha lines nu... ahhhhhhhh
keep going...
இந்த போடோவுல 'குழாய்'ரேடியோ கட்டிருக்கிற வீடு தான் எங்க சொந்த வீடு.
ReplyDeletewoww.. unga oor and veedu rendume super a iruku..
Delete