July 12, 2012

வாழ்க்கைச் சாலை




இப்போதும், B -17, தாம்பரம்  போலீஸ் ஸ்டேஷன் பக்கமாகப் போகும் போது காண முடிகிறது. ஸ்டேஷன் முன்னால், ரோட்டிற்கு அருகே உள்ள கால்வாய்  ஓரம் ‘சோகமாக’ குத்த வச்சிருக்கும் சாமான்ய மனிதர்களை.

ஏதோ ஒரு  உணர்ச்சி வசப்பட்ட கணத்தின் விளைவாக, ஏதோ ஒரு கேசில் அரெஸ்ட் ஆகி உள்ளே இருப்பவனை, வெளியே எடுக்கவும் அல்லது கேஸ் போட வேண்டாம், சமாதானமாகப் போய் விடலாம், என்று அந்த ஏரியா ‘கவுன்சிலரையோ’ அல்லது வட்டச் செயலாளர் ‘வண்டு முருகன் ‘ மாதிரி ஆட்களுக்கோ டீ, சிகரெட் வங்கித் தந்து கொண்டிருக்கும் ‘பெருசுகளை’ காண நேரும் போது அடி வயிற்றில் அமிலம் சுரக்கின்றது.

ஏதோ ஒரு சண்டையின் போது, சொன்ன வார்த்தையை மனதில் வைத்து  எங்கள் பெரிய தாத்தாவும், சின்னத் தாத்தாவும் பேசிக் கொள்வதில்லை. எவ்வளவு நாட்களாக என்று தெரியாது, ஆனால் எனக்கு விபரம் தெரிந்து ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போவதில்லை, வருவதில்லை. சின்னத் தாத்தா வீட்டிலிருந்த கவுரி சித்திக்கு அப்போது கல்யாணம் ஆகியிருக்கவில்லை. எப்போதாவது ஏதேச்சையாக பார்க்கும் போது,  சின்னத் தாத்தாவிற்கு தெரியாமல் ரகசியமாய் கேட்கும், 'எப்போ வந்த சரவணா, அம்மா எப்படி இருக்காங்க என்று'.

சின்ன அம்மாச்சி சாவின் போது தான் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்தது.

பெரிய விஷேசம் ஏதோ ஒரு சண்டையைச் சேர்த்தும் வைக்கலாம் அல்லது  புதிதாகப் பிரித்தும் வைக்கலாம்.

பங்காளிகளுக்குள் ‘செய்வினை’ வைத்து விட்டார்கள் என்பதே  ஊருக்குள் முக்கால்வாசி சண்டைகளுக்கு காரணமாக இருக்கும்.

ஊரில் யாருக்காவது முடியாமல் போய், படுத்த படுக்கையாய் இருப்பதும், அதற்குக் காரணம், அவர்களின் பங்காளி யாரோ வைத்த ‘ தகடு' தான் என்பதும் சாதாரணமாகக் காணப்படக் கூடிய காட்சி.

ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் ஏதோ ஒரு அற்பக் காரணத்திற்காக சண்டையிட்டு வாழ்வின் இறுதி வரை பேசாமல் இருந்தவர்களும் உண்டு.

பேரன்பும் பெருங்கோபவும் கொண்ட சாமான்ய மனிதர்களிடம் இறுதி வரை இருப்பது, தன்மானமும், சுய கவுரவமும் மட்டும் தான்.
கடைசி வரை என் அப்பா அ.தி.மு.க கரை வேட்டியைத் தவிர வேறு வேட்டி கட்டவில்லை. எந்த குடும்ப விழாவிற்குச் சென்றாலும்  அதே கரை வேட்டிதான்.

தெக்கு வீட்டு ‘மாமா’ தி.மு.க விலிருந்து எந்த மாற்றுக் கட்சிக்கும் செல்லவில்லை.

‘மாப்ள, வேஷ்டிய கரை மாத்திக் கட்டுரதவிட ஒரு முழக் கயித்துல தொங்கலாம்’ என்பார்.

ஊரில் குல சாமியைக்  கும்பிட்டு விட்டு கடலைக் காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தோம். ஒரு அக்கா கடலை ‘ஆய்ந்து’ (பறித்து) கொண்டிருந்தது.

பச்சக் கடலை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என்றாலும் ‘கேட்டு வாங்கி சாப்பிட’ நகர மனசு தயங்கியது.

சரி, ‘காசு கொடுத்தால் கொடுக்கப் போகிறார்கள்’, நாம் கேட்டுப் பார்க்கலாம் என்று அருகே சென்றேன்.

அக்கா, பச்சக் கடலை சாப்பிடுரதுக்கு தரீங்களா, காசு கொடுக்கிறேன் என்றேன்.

அதற்கு அந்த அக்கா, அதெல்லாம் முடியாது, ‘திங்கிற கடலைக்கு எதுக்கு அப்பு காசு’ இந்தா இந்த பொட்டியில இருக்கிற கடலைய அப்படியே கொட்டிக்க’ என்று ஒரு ஐந்து படி கடலையை அப்படியே கொடுத்தது.

பரவல்லக்கா, இந்த வெயில்ல காலையில இருந்து வேல செஞ்சிருக்கீங்க, இத வச்சுக்கங்க, என்றதற்கு, வெயில் உங்களுக்கு தான் புதுசு, எங்களுக்கு பளகிப் போச்சுப்பு’ என்று இறுதி வரை மறுத்து விட்ட அக்காவின் மனது, ஏறக்குறைய ஊரில் எல்லோர்க்கும் வாய்த்தது தான்.

பணம் கொடுத்து வாங்க நினைத்த என்னை, எளிய அன்பைக் கொடுத்து, இன்னும் பணத்தால் மட்டுமே வாங்க முடியாத ‘பல விசயங்கள்’ உலகில் இருக்கின்றனடா’ என அந்த அக்கா சொன்னது ‘வாழ்க்கைப் பாடம்’
எளிய மக்கள் இன்னும் ‘நல்லவர்களாகவே’இருக்கிறார்கள்.   

மனிதன் அவன் விரும்பியபடி வாழ்வது தானே வாழ்க்கை.

சாலை என்பது அவசரமாக ‘காரில்’ செல்பவனுக்கு மட்டும் அல்ல. வேர்க் கடலை கொறித்தபடி மெதுவாக நடக்கும் வழிப்போக்கனுக்கும் சொந்தமானது தானே.

3 comments:

  1. wowwwwwwww............. 'காண நேரும் போது அடி வயிற்றில் அமிலம் சுரக்கின்றது' indha solladal r pidichirundhadhu... r perfect a solirukinga with lots of crispness.. really nice.. keep rocking...

    ‘ஆய்ந்து’ - woww r azhagana thamiz varthai...

    'சாலை என்பது அவசரமாக ‘காரில்’ செல்பவனுக்கு மட்டும் அல்ல. வேர்க் கடலை கொறித்தபடி மெதுவாக நடக்கும் வழிப்போக்கனுக்கும் சொந்தமானது தானே.' car la poravanai vida vazhipokkanu ku than vazhaikai r pakkathula... r interesting and r r r arthamulladha iruku...

    saravanan... indha blog r r r azhaga iruku..


    tomorrow 2nd saturday enaku leave.. blog gu ku tokalanu nenachikadhinga.. will get back to you on Monday... Have great weekend...


    keep going...

    ReplyDelete
  2. unga facebook id-ya indha mail idku anuppa mudiyuma? mhkraj75@rediffmail.com

    ReplyDelete