இரவில் வாங்கினோம்!
இன்னும் விடியவே இல்லை என்பது இன்னும் நிஜமாகவே இருக்கின்றது. வெள்ளையரிடம்
இருந்து ஆட்சியை அதிகாரத்தை இந்தக் கொள்ளையர்களிடம் கொடுத்துச் சென்றதன் பெயர்
தான் சுதந்திரமா?
காங்கிரஸ் கட்சிக்கான
அவசியம் சுதந்திரம் பெற்றுத் தந்ததுடன் முடிந்து விட்டது! எனவே கட்சியைக்
கலைத்து விடுங்கள் என்று சொன்ன காந்தியின் பேச்சைக் கேட்காததில் ஆரம்பித்த
அக்கட்சியின் ஊழல், போபர்ஸ், ஆதர்ஸ், காமன்வெல்த் விளையாட்டு, பாமாயில், நிலக்கரி என்று பரிணாம
வளர்ச்சி அடைந்து இன்று ஸ்பெக்ட்ரம் வரை வளர்ந்து இருக்கிறது. இது தான் காந்தி
கனவு கண்ட தேசமா.
இந்தியா ஒரு ஜனநாயக
நாடு. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று பள்ளிப் பாடம் படிப்பதற்கு நன்றாகத்
தான் இருந்தது. ஆனால் நீதியின் முன்பு அல்ல என்று இப்போது தெரிகின்றது. நீதி
என்பது குற்றம் செய்தவனின் பண பலம், அதிகார பலம் இவற்றை வைத்தே தீர்மானிக்கப்
படுகின்றது. இல்லை என்றால் இந்நேரம் சுட்டுக் கொல்லப்பட வேண்டிய ஒரு ஆசாமி, சாமி
என்று சொல்லிக் கொண்டு, நீதி மன்றம் கூப்பிடும் நேரம் எல்லாம் ஏதாவது ஒரு சாக்கு போக்கு
சொல்லிவிட்டு இன்னமும் கஷ்மீரில் தனது சிஷ்ய கோடிகளுடன் ஜாலியாக சவாரி செய்ய
முடியுமா?
குற்றம் சாட்டப்பட்ட
திருடி ஒருவள், என் வழக்கை விசாரிக்கும் நீதிபதி இந்த இந்த முறைவாசல் எல்லாம்
செய்து தான் வந்திருக்க வேண்டும் என்று முறையிட்டு, நடந்தா காலு வலிக்குது, படுத்தா
பல்லு வலிக்குது என்று விதம் விதமாய் யோசித்து வாய்தா வாங்க முடியுமா?
நீயே ஒரு திருடி.
உனக்கேது என்னைப் பற்றி, என் நியமனத்தைப் பற்றிப் பேச அருகதை என்று கேட்க முடியாத சட்டம்
தான் சாமான்ய மனிதனை பாடாய் படுத்துகின்றது. காசுக்கேத்த தோசை மாதிரி பணத்துக்கேத்த
திறமையான வக்கீல், திறமையான வக்கீல் மூலம் தனக்குத் தேவைப்பட்ட நீதியை வாங்க
முடிகின்றதே.
பேசிய குற்றத்திற்கு
தடா, போடா என்று பயமுறுத்தும் சட்டங்கள், கொலை செய்தவனையும் வெளியில் விடும்
ஜாமீன் சம்பிரதாயங்கள், தப்பு செய்தவன் தன்னை யாரும் கைது செய்யக் கூடாது என்று முன் ஜாமீன் தரும் முரண்பாடுகள் என சட்டப் புத்தகத்தில் ஏகப் பட்ட போத்தல்கள். போத்தல்களை காட்டிக் கொடுத்து தொழில் செய்யும் திறமையான வக்கீல்கள் (இன்னும் ஒரு முறை சரியாகப் படியுங்கள், காட்டிக் கொடுத்து என்று தான் எழுதி இருக்கிறேன்) சட்டத்தில் தான் எவ்வளவு சிக்கல்கள், மீனில் தான் எவ்வளவு வகைகள்.
ஒரு கவுன்சிலர் தனது
எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு லெவலில் காரியம்
சாதிக்கின்றார். அவரை விடு என்று சொன்னால் வெளியில் விடமும், இவனை உள்ளே தூக்கிப்
போடு என்றால் ஜெயிலில் போடவும் அவரால் முடிகின்றது. எம்.எல்.ஏ என்றால்
இன்ஸ்பெக்டர், ஏ.சி லெவல். மந்திரி என்றால் டி.சி.
யாரங்கே என்று சி.எம்
அழைத்தால், சொல்லுங்க மேடம் என்று ஓடோடி வருகின்றார் கமிஷனர். அந்த ஆள இன்னைக்கு
தூக்கிடுங்க’ என்றால் நடு இரவில் 'அய்யயோ, கொல பண்றாங்கப்பா’ என்று அலற அலற தூக்க
முடிகின்றது. அப்பாவிப் பெண் மீது கஞ்சா வழக்கும், நேற்று வரை நெருக்கமாக சுற்றிக்
கொண்டிருந்த ஆள் மீது, சொத்துக் குவிப்பு வழக்கும் போட்டு இருப்பதை எல்லாம் கறக்க
முடிகின்றது.
நாட்டின் சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்படும் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கின் இப்போதைய நிலை என்ன. அந்த வழக்கு எதற்காகப் போடப் பட்டது. சென்ட்ரல் கவர்ன்மென்ட் என்ற ரிங் மாஸ்டர் கையில் வைத்திருக்கும் சாட்டை அல்லது அங்குசமே சி.பி.ஐ என்றால் சுதந்திர இந்தியாவா அல்லது இது தந்திர இந்தியாவா.
நாட்டின் சுதந்திரமான அமைப்பு என்று சொல்லப்படும் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் வழக்கான ஸ்பெக்ட்ரம் வழக்கின் இப்போதைய நிலை என்ன. அந்த வழக்கு எதற்காகப் போடப் பட்டது. சென்ட்ரல் கவர்ன்மென்ட் என்ற ரிங் மாஸ்டர் கையில் வைத்திருக்கும் சாட்டை அல்லது அங்குசமே சி.பி.ஐ என்றால் சுதந்திர இந்தியாவா அல்லது இது தந்திர இந்தியாவா.
அரச பலம் இப்படி
என்றால் அதிகார பலம் மட்டும் சும்மாவா இருக்கும். கடைசி பஸ்ஸை தவற விட்ட, ஒரு நகை
திருப்பச் சென்ற பெண்னை, வேட்டை நாய்களைப் போல குதறிப் போட முடிகின்றது. ஆதாரத்துடன்
நிரூபிக்கும் போதும் தனது சக அதிகாரியைக் காப்பாற்ற அந்தத் துறையே துடிக்கின்றது.
எத்தனை எத்தனை பெண்கள். பத்மினி முதல் வசந்தி வரை. கற்பழிப்பு புகார்களின் மீது
காவல் துறை நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். காவல் நிலயங்களில் கற்பழிக்கப்பட்ட
பெண்களின் வழக்குகளில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றவாளிகள்
தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.
குற்றவாளியைக்
காப்பாற்ற வேண்டி ஒரு சிறுமியின் கருப்பையில் கத்தி வைத்த அந்த மருத்துவர் எவ்வளவு
பெரிய சமூக இழுக்கு. இவனை எல்லாம் என்ன செய்யலாம். எப்படி சமூகத்தில் திரும்பவும்
வலம் வர முடிகின்றது இவர்களால்.
குற்றம் செய்தவன்
எல்லாம் சிரித்துக் கொண்டே சிறை செல்வதும், கொஞ்ச நாளிலேயே தகத்தாய சூரியனாய்
வெளிவந்தால், உண்மையில் தப்பு எவர் மீது.
நல்லவர்களை, பழி
பாவத்திற்கு அஞ்சுபவர்களை பொழைக்கத் தெரியாத மனுஷன் என்றல்லவா இச்சமூகம் பெயர்
வைக்கின்றது. முறை செய்து காப்பாற்றும்
மன்னவன் எப்போது வரப் போகின்றான். தனக்குப் பிடிக்காத கேள்வி கேட்ட ஒரு சாமான்ய
மனிதனை சிறையில் தள்ளச் சொன்ன மாதாஜிக்களின் காலம் இது.
இங்கே எதிலும் சுதந்திரமில்லை.
நீ என்ன நினைக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட
வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப் படுகின்றது. தி.மு.கா, அ.தி.மு.கா
இரண்டுமே தனியார் நிறுவனங்கள். தமிழ் நாடு அவர்களின் தொழிற்சாலை. சில தொழிற்சாலைகளில்
இரண்டு கம்பெனிகளுமே ஈக்குவல் ஷேர் வைத்திருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவை டாஸ்மாக்,
மணல் வியாபாரம்.
இதோ, இன்றோ நேற்றோ செய்த தவறைக் கண்டுபிடித்தது போல, சில பல கண்மாய்களையே காணமல் போகச் செய்த கிரானைட்
ஊழலைக் ‘கண்டு’ பிடித்திருக்கிறார்கள். இனி ஸ்பெக்ட்ரம் மறைந்து போகும். கிரானைட்
ஊழலை மறைக்க வேறு ஏதாவது கண்டு பிடிப்பார்கள்.
அரசியல்
பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்று இப்போது சொன்னால் நம் அரசியல்வாதிகளுக்கு
சிரிப்பு வரும். நாங்க எல்லாம் சட்டசபையிலேயே சீன் பாக்குற ஆளுங்க’ ... எங்க கிட்ட
போயி... என்பார்கள்.
இந்த நாளைக் கொண்டாட
வேண்டும் என்று சொல்லும் என் நண்பர்களுக்கு நான் என்னத்த சொல்ல!!
இதை எல்லாம் தட்டிக்
கேட்க ஒருத்தன் வராமலா போயிருவான்!! கண்டிப்பா வருவான்டா!! என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்க வேண்டியது தான்.

hi ennachu.. sudhandhirama irukingala.. no further blogs...
ReplyDeleteany problem?.. pasanga nalla irukangala?... r busy o!!!!
hv great weekend...
கண்ல ஒரு கட்டி வந்து நாலு நாளா கஷ்டப் படுத்துது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை அனால் சின்ன ஆபரேஷன் பண்ண வேண்டி வரும் போல் தெரிகின்றது.
ReplyDeleteஇந்தப் ப்ளாக் எழுதும் நேரங்களில் தான் நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கின்றேன்
iyoooo.. take care saravanan.. shankara nethralaya thavira engayume poidadhinga...... they are the best for any eye related problems.....
ReplyDelete