இன்று திரும்பவும்
‘அம்மா வந்தாள்’ படித்தேன். இது வரை ஒரு முப்பது தடவை படித்திருப்பேன். ஒவ்வொரு
முறையும் ஒவ்வொரு அர்த்தம் தரும் வகையில் எழுத தி. ஜா போன்ற சிறந்த
எழுத்தாளர்களால் மட்டுமே முடியும்.
நாவல், காவிரிக் கரையில் ஆரம்பித்து திரும்பவும்
காவிரிக் கரையிலேயே முடிவது சிறப்பு. கதை என்ன என்றால் நாலு வரியில் சொல்லி விட
முடிந்த சிறு கதை தான். ஆனால் படிக்கப் படிக்க ஒரு அழகான பயணம் போல, அமைதியாக ஒரு
சீராகப் பாயும் நதி போல, தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு மென்மையும் மனித மனங்களின்
ஓட்டத்தை அதன் போக்கிலிலேயே செல்ல விடுவதும் தி.ஜா, வண்ண தாசன் போன்றவர்களின்
இயல்பு. பாலகுமாரன் நாவல்களில் அவரின் ‘கருத்துக்கள்’ ஒரு கதாபாத்திரத்தின் சரி,
தவறுகளைச் சொல்லும். நடு நடுவே எழுத்தாளரின் சொந்தக் கருத்துக்களும் துருத்திக்
கொண்டு தெரியும்/
ஆனால் இங்கு
‘அலங்காரம்’ செய்த தவறையோ அல்லது சிவசுவின் துரோகத்தையோ சரி அல்லது தவறு என்று
சொல்லவில்லை. கதைக்குள் செல்வோம்.
‘அப்பு’ என்ற
கதாபாத்திரத்தில் கதை ஆரம்பிக்கின்றது. திருச்சியில் காவிரிக் கரை ஓரமாக அமைந்த
வீட்டில் வேதம் படிக்கும் அப்புவிற்கு படிப்பு முடியும் நாள் நெருங்கி விட்டது.
அந்தப் பாட சாலை பவானி அம்மாள் என்பவரால் தர்மத்திற்காக நடத்தப் படுகின்றது. ‘இந்து’ பவானி அம்மாளின் மாட்டுப் பெண். திருமணம் ஆன
ஒரு மாதத்தில் பவானி அம்மாளின் மகன் இறந்து விட்டாலும், இந்து அந்த வீட்டிலேயே
இருந்து வேத சாலையில் படிக்கும் மாணவர்களுக்கு உணவு அளிப்பது போன்ற வேலைகளைப்
பார்த்துக் கொள்கின்றாள். அவளுக்கு அப்புவைப் பிடிக்கும்.
அப்புவுக்கு இரண்டு
அண்ணன்கள், ஒரு தம்பி, இரண்டு அக்கா. அப்புவின்
சகோதரர்கள் எல்லாம் நல்ல வேளைகளில் இருக்க, இவனை மட்டும் தான் செய்த பாவத்திற்கு
பிராயச்சித்தமாக வேதம் படிக்க அனுப்புகிறாள். அப்பு’ அந்த
வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் சிவசு ‘சாயலில்’ இருக்கின்றான்.
படிப்பு முடிந்து வீட்டிற்குத்
திரும்பி வரும் அப்பு வீட்டில் இருக்கும் போது நடக்கும் விசயங்களில் மனம் ஒப்பாமல்
திரும்பவும் பாட சாலைக்குத் திரும்புகிறான்.
அம்மா வந்தாள் என்று
கதாசிரியர் இந்துவைத் தான் சொல்லி இருக்க வேண்டும். இந்தப் படைப்பில்
வண்டிக்காரனாக வரும் ‘தாந்தோணி’ முதல் காவிரிக் கரை ஓரமாக உள்ள காது கேளாத ‘சிவன்
கோவில் அய்யர் வரை ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம்.
யாருமில்லாத ஏகாந்த
இருட்டில் வானம் பார்த்தபடி மல்லாந்து படுத்து, சுவர்க்கோழிகளின் சத்தத்தோடு,
மரத்தில் அடைந்திருக்கும் பறவைகளின் சத்தமும் கேட்க மனத்தில் ஒன்றுமில்லாமல் நான்
அடைந்த சுகம் தான் காவிரிக் கரையில் அப்பு அனுபவித்த சுகம்.
உண்ட வீட்டிற்குச்
செய்யும் துரோகம் என ‘இந்து’ நெருங்கும் போதெல்லாம் விலகும் அப்பு, ஒதுங்கி ஒதுங்கி
செல்லும் அப்புவைக் கண்டு கோபம் கொண்டு, தன்னிடம் இருந்து விலகி விடுவானோ என்று
அவங்க அம்மாவைப் பற்றி சொல்லி கோபம் காட்டும் இந்து’ என மனித மனத்தின் இயல்பை
அப்படியே தருகின்றார் தி.ஜா.
சில இடங்களில்
இந்துவைப் பற்றிய வர்ணனைகள் கொஞ்சம் அவசியம் அற்றவை என்று தோன்றினாலும் நாவலின்
சுவாரசியம் கருதி ஆசிரியர் கொடுத்திருக்கலாம். இங்கே கவனிக்க வேண்டியது, அப்புவின்
அம்மா’ அலங்காரம்’ எந்த சூழ்நிலையில் தன்னை சிவசுக்குக் கொடுத்தார் என்ற சுய
விளக்கமோ, அப்புவின் அப்பா ஏன் தடுக்கவில்லை என்ற காரணமோ சொல்லப் படவில்லை.
அது சரி, எல்லாவற்றையும்
தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமோ?
ஒரு முறை படித்துப்
பாருங்களேன். உங்களுக்கும் அப்புவைப் பிடிக்கும்.

woww.. r rasichi ezhidhirukinga.. will search for this book in library... enaku konjam porumai kedaiyadhu.. ellame avasaramai... adhan sujatha book pidikum.. thevai illadha varnanai ellam irukadhu... core point ku udane poiduvar...
ReplyDeleteivlo dhooram solringa.. will definitely read this and come with my comment...
keep going...
courierla anuppavaa?
ReplyDeleteஅன்பு சரவணண்,
ReplyDeleteகதையின் மையமே அப்புவையும் இந்துவையும் முன்வைத்துதான் நட்ந்தேருகிறது.அப்பு ”நீதான் எனக்கு கடைசி பிள்ளை” என்று அலங்காரம் அப்புவிடமே ஒரு தருனத்தில் சொல்கிறாள்.
ந்ல்லது.
30 முறை படித்ததில் ”அப்பு’ அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் சிவசு ‘சாயலில்’ இருக்கின்றான்” என்ற குறிப்பு தவறு நண்பரே!............சிவசு ‘சாயலில்’ இருப்பது அவனின் தம்பி கோபு.
சரி போகட்டும்........இந்து பவானி அம்மாளின் தம்பி மகள்.
((இந்து’ பவானி அம்மாளின் மாட்டுப் பெண் இல்லை))..
(((திருமணம் ஆன ஒரு மாதத்தில் பவானி அம்மாளின் மகன் இறந்து விட்டாலும்......)))
பவானி அம்மாவிற்கு பிள்ளை பாக்கியமே இல்லை
*****நாவலின் மையப் பாத்திரங்களின் அறிமுகமே இப்படி என்றால் மீதி எப்படியோ???
நண்பரே......ஒரே ஒரு முறை முழுதாக படித்துப் பாருங்களேன்.,
மிக்க அக்கறையுடன்,
முளுகாரப்பா